சென்னை, செப்.19 பெரியாரின் பிறந்தநாளை யொட்டி (17.9.2023) அவரை வாழ்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பெரியார் குறித்து ட்விட் டரில் பதிவிட்டுள்ள அவர் “அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப் படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது! பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment