'சுயமரியாதை சுடரொளி' கு.கவுதமன் படத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

'சுயமரியாதை சுடரொளி' கு.கவுதமன் படத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்

குடந்தை, செப். 15- குடந்தை, சூரியா மகாலில் 13.09.2023 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் குடந்தை மாநகர தலைவர் ‘சுயமரியாதை சுடரொளி' கு.கவுதமன் அவர்களின் படத்தினை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவேந்தல் நிறைவுரையாற்றினார்.           

நிகழ்ச்சி மாவட்ட தலைவர் கு.நிம்மதி தலைமையிலும், கழக காப்பாளர்கள் தாராசுரம் வை. இளங்கோவன், வலங்கை வே. கோவிந்தன், தலைமைக் கழக அமைப் பாளர் க.குருசாமி, குடந்தை மாவட் டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, குடந்தை மாநகர செயலாளர் வழக்குரைஞர் பீ.இர மேசு, குடந்தை ஒன்றியத் தலைவர் மருதாநல்லூர்  மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் அசூர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், உரத்தநாடு இரா.குண சேகரன், கழகக் காப்பாளர் அய்ய னார் தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், மாநிலங்களவை உறுப் பினர் சு.கல்யாணசுந்தரம், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன் பழகன், குடந்தை மாநகர துணை மேயர் சுப.தமிழழகன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் கட்சி தலைவர் புரட்சிமணி ஆகி யோர் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றி வீரவணக்கம் செலுத் தினர்.  

மேலும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், மாவட்ட செயலாளர் பேராசியர் சேதுராமன், துபாய் மூர்த்தி, மாவட்ட துணை தலைவர் வ.அழகுவேல், மாவட்ட து. செய லாளர் தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி தலைவர் பேராசிரி யர் க.சிவக்குமார் மாநகர மேலக் காவேரி பகுதி தலைவர் காமராஜ், செயலாளர் மனோகரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ், செயலாளர் பெரியார் கண்ணன்,  து.செயலாளர் சங்கர், பாபநாசம் ஒன்றியத்தலைவர் தங்க.பூவானந்தம், திருவிடை மருதூர் ஒன்றிய செயலாளர் பவுண்டரீகபுரம் முருகேசன், 

தஞ்சை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்  கலைச்செல்வி, மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி, மாநகர மகளிரணி செயலாளர் அம்பிகா, சோழபுரம் நகர தலைவர் ரவிசந்திரன், செய லாளர் மதியழகள், குடும்பத்தினர் கள் சார்பாக பேராசிரியர் ஜி.பாலகிருஷ்ணன்,  சீனிவாச நகர் நல மன்றத்தினர் சார்பாக சாமி நாதன், குடந்தை மாநகர திமுக கவுன்சிலர் ஜெயரதி கண்ணன், அ.தி.மு.க மு.கவுன்சிலர் இராம லிங்கம்,  குழந்தைகள் நல மருத்துவர் சாம்பசிவம் மற்றும் உறவினர்களும் கழகத் தோழர்களும், சமூக ஆர் வலர்களும் பெருந்திரளாக பங் கேற்று வீரவணக்கம் செலுத்தினர். 

வருகை தந்தோருக்கு  கு.கவுத மன் அவர்களின் மூத்த சகோதரி பூங் கோதை நன்றி கூறினார். கவுதமன் சகோதரர்கள் கு.கண் ணையன், கு.காமராஜ் சகோதரிகள்  மணி மேகலை, தமிழ்ச்செல்வி, மைத்து னர்கள் இராமமூர்த்தி, இளங் கோவன், மணிவன்னன், அசோகன், கண்ணன், மோகன் சம்பந்திகள் மஞ்சகுடி சின்னையன், சென்னை கருணாநிதி பேரப் பிள்ளைகள் மதுசிறீ, நவீனாசிறீ, அறிவழகன், அன்புச்செல்வி ஆகி யோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சிக்கு முன்னே குழந் தைகள் நல மருத்துவர் சாம்பசிவம் கு.கவுதமன் அவர்களின் நினைவாக குடந்தை மேம்பாலம் அக்ச்சயா மருத்துவமனையில் 50 தாய் மார்கள் பங்கேற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம் நடத்தி சிறப்பாக பங்கேற்ற முதல் மூன்று தாய்மார்களுக்கு வெள்ளி நாண யங்களும் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கினர். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சார்பாகவும், தலை மைக் கழக மூத்த நிர்வாகிகள் சார் பாகவும் கழகப் பொதுச்செயலார் வீ.அன்புராஜ் வசந்தி கவுதமன் ஆறுதல் கூறினார். நிகழ்ச்சி ஏற் பாடுகளை கு.கவுதமன் அவர்களின் மகள்கள், மருமகன்கள் மலர்விழி - குருமூர்த்தி, அருள்மொழி - தமிழரசன் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment