குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடலில் முடிவு

👉 பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது 

👉 புதிய தொழிற்சங்க கிளைகள் அமைப்பது 

குடந்தை,செப்.9- திராவிடர் தொழி லாளர் அணியின் குடந்தை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2023 அன்று  மாலை 6:30 மணி அளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

தொழிலாளர் அணியின் மாவட்ட செயலாளர் கோவி.பெரியார் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் த.ஜில்ராஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, மாவட்ட துணைத் தலை வர் வ.அழகுவேல், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி, மாவட்ட துணை செயலாளர் ஆ.தமிழ் மணி, ஆகியோர் முன்னிலை வகித் தார்கள்.

குடந்தை கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி துவக்க உரையாற்றினார்.

குடந்தை கிழக்கு பகுதி பொறுப் பாளர் கு.ரியாஸ்அஹமது, தியாக சமுத்திரம் சி.பஞ்சாபி, திருப்பனந்தாள் ஒன்றிய  மேனாள் செயலாளர் துகிலன் தமிழ்மணி, திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளர் கு.முருகேசன் மாவட்ட கழக துணை செயலாளர் ஆ.தமிழ்மணி, பட்டீஸ்வரம் கிளைக் கழகத் தலைவர் அ. இளவழகன், சோழ புரம் கழக தலைவர் விளந்தகண்டம் மதியழகன், கழக காப்பாளர் வலங்கை கோவிந்தன், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி, மாநகர கழக செயலாளர் எஸ்.அம்பிகா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அறிவுமணி முருகேசன், வலங்கைமான் ஒன்றிய கழக செய லாளர் க.பவானி சங்கர், திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்க தலைவர் சாமிநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் முனைவர் ம.சேதுராமன், திருநாகேஸ்வரம் ஒன்றிய கழகத்தின் பொறுப்பாளர் நா.முருகானந்தம், கும்பகோணம் பொறுப்பாளர்கள் சிவபாலன், இரா வணன் ஆகியோர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

அறிவுலகப் பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்,   தமிழர் தலைவர் அவர்களுக்கு தாகைசால் தமிழர் விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், விருது பெற்ற  தமிழர் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியும், திராவிடர் கழக மாம் தாய்க் கழகத்தின் சார்பில் எதிர்வரும் அக்டோபர் 6 அன்று தஞ்சாவூரில் நடக்கும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்துவது குறித்தும், திராவிடர் தொழிலாளர் அணிக்கு ஒன்றியம் தோறும் புதிய கிளைகள் அமைத்து, அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி கருத்து உரையாற்றினார்.

குடந்தை மாநகர தலைவர் கு.கவுதமன் மறைவிற்கும் (25.08.2023), ஒன்றிய திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் க.மோகன் அவர்களுடைய துணைவியார் லதா மோகன்(27.08.2023)  அவர்களுடைய மறைவிற்கும் இந்த கலந்துரையாடல் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாள் செப்டம்பர் 17இல் திராவிடர்களின் தேசிய திருவிழாவாக கொண்டாடும் வகையில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, இனிப்பு வழங்குவது, கிராமங்கள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மற்றும் அனைத்து ஊர்களிலும் கழகத் தோழர்களின் இல்லங்களிலும் கழக இலட்சிய கொடியினை ஏற்றுவது, பெரியார் பட ஊர்வலம் நடத்துவது, ஒலிப்பெருக்கி மூலம் அய்யாவின் கொள்கை பாடல்களை ஒளிபரப்புவது, சுற்றுச் சூழலை பாதுகாக்க மரக் கன்றுகள் நடுவதும், தெருமுனை கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்துவதும், பிறந்தநாள் விழாவினை எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும், திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில்  06.10.2023 அன்று தஞ்சாவூரில் டாக்டர் கலைஞர் நூற் றாண்டு விழாவிற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா வில் கழக தோழர்கள் குடும்பம் குடும்பமாக மாநாடு போல் பங்கேற்பது என்றும், அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை அகிலம் அறிய செய்திட அயராது உழைத்து வரும் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி சிறப்பித்த 'சமூக நீதியின் சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த கலந்துரையாடல் கூட்டம் நன்றி யையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும், திராவிடர் தொழிலாளர் அணிக்கு கும்பகோணம் மாவட்டத்தில் ஒன்றியம் முழுவதும் கிளைக் கழகம் உருவாக்கி புதிய தோழர் களை பொறுப்பாளர்களை அனைத்து பகுதிகளிலும் இணைப்பது எனவும், திராவிடர் தொழிலாளர் அணியின் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வாயிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அனைத்து தொழிற் சங்கங் களையும் அழைத்து திராவிடர் தொழிலாளர் அணியின் சார்பில் மாலை அணிவித்து கொடியேற்றுவது எனவும் கலந்துரை யாடலில் முடிவு செய்யப்பட்டது.குடந்தை,செப்.9- திராவிடர் தொழி லாளர் அணியின் குடந்தை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2023 அன்று  மாலை 6:30 மணி அளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

தொழிலாளர் அணியின் மாவட்ட செயலாளர் கோவி.பெரியார் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் த.ஜில்ராஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, மாவட்ட துணைத் தலை வர் வ.அழகுவேல், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி, மாவட்ட துணை செயலாளர் ஆ.தமிழ் மணி, ஆகியோர் முன்னிலை வகித் தார்கள்.

குடந்தை கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி துவக்க உரையாற்றினார்.

குடந்தை கிழக்கு பகுதி பொறுப் பாளர் கு.ரியாஸ்அஹமது, தியாக சமுத்திரம் சி.பஞ்சாபி, திருப்பனந்தாள் ஒன்றிய  மேனாள் செயலாளர் துகிலன் தமிழ்மணி, திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளர் கு.முருகேசன் மாவட்ட கழக துணை செயலாளர் ஆ.தமிழ்மணி, பட்டீஸ்வரம் கிளைக் கழகத் தலைவர் அ. இளவழகன், சோழ புரம் கழக தலைவர் விளந்தகண்டம் மதியழகன், கழக காப்பாளர் வலங்கை கோவிந்தன், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி, மாநகர கழக செயலாளர் எஸ்.அம்பிகா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அறிவுமணி முருகேசன், வலங்கைமான் ஒன்றிய கழக செய லாளர் க.பவானி சங்கர், திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்க தலைவர் சாமிநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் முனைவர் ம.சேதுராமன், திருநாகேஸ்வரம் ஒன்றிய கழகத்தின் பொறுப்பாளர் நா.முருகானந்தம், கும்பகோணம் பொறுப்பாளர்கள் சிவபாலன், இரா வணன் ஆகியோர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

அறிவுலகப் பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்,   தமிழர் தலைவர் அவர்களுக்கு தாகைசால் தமிழர் விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், விருது பெற்ற  தமிழர் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியும், திராவிடர் கழக மாம் தாய்க் கழகத்தின் சார்பில் எதிர்வரும் அக்டோபர் 6 அன்று தஞ்சாவூரில் நடக்கும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்துவது குறித்தும், திராவிடர் தொழிலாளர் அணிக்கு ஒன்றியம் தோறும் புதிய கிளைகள் அமைத்து, அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி கருத்து உரையாற்றினார்.

குடந்தை மாநகர தலைவர் கு.கவுதமன் மறைவிற்கும் (25.08.2023), ஒன்றிய திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் க.மோகன் அவர்களுடைய துணைவியார் லதா மோகன்(27.08.2023)  அவர்களுடைய மறைவிற்கும் இந்த கலந்துரையாடல் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாள் செப்டம்பர் 17இல் திராவிடர்களின் தேசிய திருவிழாவாக கொண்டாடும் வகையில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, இனிப்பு வழங்குவது, கிராமங்கள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மற்றும் அனைத்து ஊர்களிலும் கழகத் தோழர்களின் இல்லங்களிலும் கழக இலட்சிய கொடியினை ஏற்றுவது, பெரியார் பட ஊர்வலம் நடத்துவது, ஒலிப்பெருக்கி மூலம் அய்யாவின் கொள்கை பாடல்களை ஒளிபரப்புவது, சுற்றுச் சூழலை பாதுகாக்க மரக் கன்றுகள் நடுவதும், தெருமுனை கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்துவதும், பிறந்தநாள் விழாவினை எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும், திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில்  06.10.2023 அன்று தஞ்சாவூரில் டாக்டர் கலைஞர் நூற் றாண்டு விழாவிற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா வில் கழக தோழர்கள் குடும்பம் குடும்பமாக மாநாடு போல் பங்கேற்பது என்றும், அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை அகிலம் அறிய செய்திட அயராது உழைத்து வரும் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி சிறப்பித்த 'சமூக நீதியின் சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த கலந்துரையாடல் கூட்டம் நன்றி யையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும், திராவிடர் தொழிலாளர் அணிக்கு கும்பகோணம் மாவட்டத்தில் ஒன்றியம் முழுவதும் கிளைக் கழகம் உருவாக்கி புதிய தோழர் களை பொறுப்பாளர்களை அனைத்து பகுதிகளிலும் இணைப்பது எனவும், திராவிடர் தொழிலாளர் அணியின் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வாயிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அனைத்து தொழிற் சங்கங் களையும் அழைத்து திராவிடர் தொழிலாளர் அணியின் சார்பில் மாலை அணிவித்து கொடியேற்றுவது எனவும் கலந்துரை யாடலில் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment