சென்னை, செப்.5 வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்காக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மய்யம் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில் நுட்ப மய்யம், முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், தொழில் நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய் வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட் டுள்ளது.
இதன்மூலம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தமிழ்நாடு தொழில்நுட்ப மய்யத்தில் அறிவு சார் பங்குதாரர் என்ற அடிப்படையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு சிறந்த வளர்ச் சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும்.
No comments:
Post a Comment