நாக்பூர், செப். 3 - மராட்டிய மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றை சேர்க்க பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிய வரலாற்றை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக பல்வேறு மாநில கட்சிகளின் வரலாறு மற்றும் ராமஜென்ம பூமி இயக்க வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் வாரியம் இந்த புதிய பாடத்திட்டங்களை சேர்க்க ஒப்புதல் வழங்கி உள்ளது. முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு நான்காவது செமஸ்டரில் இருந்து இதனை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மராட்டிய மாநில எதிர்க்கட்சிகள் பாஜகவின் வரலாறு எழுதுவதற்கோ படிப்பதற்கோ தகுதியானது அல்ல என்று விமர்சித்துள்ளனர்.
No comments:
Post a Comment