தாய் வீட்டுச் சீதனம் எனப் பெண்கள் மகிழ்கின்றனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு பெண்களிடம் உயர்ந்துள்ளது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு புகழாரம்
சென்னை, செப். 26 - தாய் வீட்டுச் சீதனம் என பெண்கள் மகிழ்கின்றனர். மகளிர்க்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மகளிர் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது என்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ் பிரஸ்’ (23.09.2023) ஆங்கில நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.
இது குறித்து “தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ்'' நாளேட்டில் வெளி யாகியுள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:-
1.06 கோடி குடும்பத் தலைவி களுக்கு மாதம் ரூ.1000 கொடுக் கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடுகளுக்கு முன்னால் பெண்கள் வண்ண வண்ணக் கோலங் களிட்ட அழகினைப் பலரும் பெரிதாகக் கவனிக்கவில்லை.
தொன்று தொட்டு விடியற் காலையில் பெண்கள் வீட்டிற்கு முன்னால் கோலங்கள் தீட்டி அழகுபடுத்துவது அவர்களது முன்னுரிமை. இதனை 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியிலி ருந்து முதன் முதலாக சட்ட மன்றத் தேர்தலில்போட்டியிட்ட பொழுது,உதயசூரியன் சின்னத்தை மேனாள் முதல மைச்சர் கலைஞர் பிரபலப்படுத் திப் பயன்படுத்திக் கொண்டார்.
குளித்தலையில் கலைஞர் கையாண்ட முறை!
‘உதயசூரியன்’ அந்தக் காலத் தில் சுயேட்சைகளின் சின்னமாக இருந்தது. அதற்கு உள்ளூரில் விளம்பரம் தேவைப்பட்டது. தாய்மார்களின் ஆதரவை நாடி கலைஞர் தேர்தல் பரப்புரை செய்தபொழுது வீடுகளுக்கு முன்பு உதயசூரியன் சின்னத்தைக் கோலமாக வரைந்திடுமாறு பெண்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பெண்கள் இசைந்து அவ்வாறே செய்தனர் என்பதை கலைஞர் தனது வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார். தண்ணீர்பள்ளம் என்கிற ஊரில் வாக்குச் சாவடியில் கலைஞரை எதிர்த்து நின்ற காங்கிரசு வேட் பாளருக்கு ஒரு வாக்குக்கூட கிடைக்க வில்லை. இதற்கு பெண்களே காரணம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த வண்ணக்கோலங்கள், கலைஞர் தனது முன்னோடியான செயல் களாலும், திட்டங்களாலும் தாய்மார்களின் உள்ளங்களை வென்றார் என்பதையும், 1967-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு சொத்துரிமைகள் வழங்கப்பட் டன என்பதையெல்லாம் நினை வூட்டுவது மட்டுமல்லாமல், தற்போதுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களிடத்தில் அன்பை உண்டாக்கும் திட் டங்கள் தீட்டி செயல்படுவதையும் சுட்டிக்காட்டு கின்றனர்.
இந்த திட்டத்தைப் பற்றிய பொது மக்களின் கருத்தை அறியச் சென்றபொழுது, அரிய லூர் கிராமத்தில் ஒரு பெண்மணி இத்திட்டத்தை “தாய் வீட்டு சீதனம்” என்று குறிப்பிட்டார். அந்தஅம்மையாரின் சொற்களில் ஒரு விதமான எம்.ஜி.ஆர்.-சாயல் இருப்பதைக் கண்டு வியப் புற்றேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் கூட மாணவியருக்குப் பயனளிக்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்த பொழுது ‘ஒரு தந்தையைப் போல் நான் உங்களுங்கு ஆதர வளிப்பேன்” என்று கூறினார். அதேபோன்று மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கிய போதும், தனது குடும்பத்தில் பெண்கள் மீது அவர் கொண் டிருந்த அன்பையும் மரியாதை யையும் பற்றிப் பேசினார்.
அப்போது அவர் பயன் படுத்திய தாயின் கருணை, மனை வியின் உறுதுணை, மகளின் பேரன்பு ஆகிய சொற்றொடர் களால் பெண்கள் மீது தமது மனவுணர்வுகளை வெளிப் படுத்திக் காண்பித்தார்.
இத்திட்டத்தை அவர் அறி முகம் செய்த சில நாள்களுக்குப் பின்னர் ‘தி.மு.க. எதிர்ப்பு அரசியல் சார்புடைய இரண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டி ருந்தேன். இவ்விருவரின் மனைவி மார்களும் ரூ.1000 உரிமைத் தொகையைப் பெற்றிருந்தனர். இதன் பொருள் - - அந்தக் குடும் பங்களின் வாக்குகள் தி.மு.க. வுக்குச் செல்லும் என்பதாகும்.
உண்மையில், ஆண்களின் அரசியல் ஈடுபாடுகள் அவர்களு டைய குடும்பத்து பெண்கள் வாக்களிக்கும் முறையை, பாங் கினை கட்டாயமாக மாற்றும் என்பதில்லை. தங்கள் மனைவி மார்களும், தாயார்களும் குடும் பத்து ஆண்களின் விருப்பத்துக்கு மாறாக வாக்களித்ததாக புகார் செய்வதும் நிகழ்ந்துள்ளது.
இப்பொழுது முழுக்க முழுக்க பெண்களுக்கு நன்மை தரும், பயனளிக்கும்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல் படுத்துவதால் பெண்கள் மத்தி யில் அவருடைய செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இது பெண்களின் கூற்றுகளி லிருந்து அறியப்படுகிறது. விடியல் பயணம் (பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்), புதுமைப் பெண் (மேல் படிப்புகளுக்குச் செல்லும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை), பள்ளி மாணவர்களுக்கான முதலமைச் சரின் காலை உணவுத்திட்டம் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே பெண்களிடையே பேசு பொருளாக ஆகியுள்ளன.
ஆகவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டமா னது தமிழ்நாட்டு அரசியல் இயக்க நிலையையே மாற்றிக் கொண்டிருக்கலாம். முதல் முறை யாக வாக்களிப்போர், மகளிர், கீழ்த்தட்டு வர்க்கத்தினர் (தி.மு.க. வின்) நல்வாழ்வுத் திட்டங்களால் பெரிதும் மகிழ்ச்சியுற்றிருக்கின் றனர். இது தி.மு.க.விற்கு மேலும் ஆதரவாளர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது.
தற்போதைய தி.மு.க. அரசின் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட் டங்கள் பெண்களின் வாழ்வா தாரம், கண்ணியம், மரியாதை, அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றை மாற்றியமைப்பதன் மூலம் அவர்களைக் கைதூக்கி விடுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
-இவ்வாறு‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’நாளேட்டில் வெளி வந்துள்ள கட்டுரையில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment