புதுடில்லி, செப். 1- நாடாளுமன்ற மழைக்கால கூட் டத்தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி கடந்த 11ஆம் தேதி நிறைவடைந்தது.
மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை முன்வைத்து இந்த தொடரில் எதிர்க் கட்சிகள் புயலை கிளப்பி இருந்தன. இந்த தொட ரின் நிறைவு நாளான கடந்த 11ஆம் தேதி மக்க ளவையில் அமளியில் ஈடு பட்டு அவை நடவடிக்கை களுக்கு குந்தகம் விளை வித்ததாக கூறி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். அவரது நட வடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புரி மைக்குழு விசாரித்தது. நாடாளுமன்ற சிறப்புரி மைக்குழு முன்பு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அண்மை யில் ஆஜரானார். அப்போது அவர், மக்களவையில் தனது ஒழுங்கீன செயல் பாடுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குழுவில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. இதை ஏற்று அவரது இடைநீக்கம் ரத்து செய் யப்பட்டது. அவரது தகுதி நீக்க நடவடிக்கை 30.8.2023 அன்று முதல் ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது
No comments:
Post a Comment