சென்னை, செப். 26 - தியாகராயர் நகரில் செப்டம் பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக கூட்டத்தில் பேசிய, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மேனாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் தாழ்த்தப்பட்ட இனப் பெண்கள் குறித்து இழி வாகப் பேசியதாக விடு தலைச் சிறுத்தைகள் கட் சியின் மத்திய சென்னை மேனாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், ஆர்.பி.வி.எஸ். மணியன் தொடர்பான அவ தூறு கருத்துகள் காட் சிப் பதிவாகவும் சமுக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின.
இதன் அடிப்படை யில் ஆர்.பி.வி.எஸ்.மணி யன் மீது இந்தியத் தண் டனைச் சட்டம், வன் கொடுமை தடுப்புச் சட் டம் ஆகியவை உள் ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில், மாம்பலம் காவல் நிலை யத்தினரால் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அதி காலையில் ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவரது வீட் டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து செப்டம்பர் 27ஆம் தேதி வரை ஆர்.பி.வி.எஸ்.மணியனை நீதிமன்ற காவ லில் அடைக்கச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தர விட்டார்.
இந்த நிலையில், உடல் நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டுமென ஆர்.பி.வி.எஸ். மணியன் மனுத் தாக்கல் செய்தார். மேலும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி உறுதி மொழி பிரமாண பத்தி ரமும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
காவல் துறை தரப்பில் வெறுப்பு மற்றும் அவ மதிப்பு கருத்துகளைத் தெரிவித்து உள்ளதாக வும், மருத்துவ சான்றுகள் அனைத்துமே 2 ஆண்டுக ளுக்கு முன்பானவை என் றும் கூறி, ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு பிணை வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது.
ஆர்.பி.வி.எஸ். மணிய னின் மனு மீது (செப். 25) உத்தரவு பிறப்பித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, பிணை மனுவை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment