மின் கட்டண உயர்வு சிறு, குறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

மின் கட்டண உயர்வு சிறு, குறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னை,செப்.27- நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்று தமிழக அமைச்சர்களிடம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

நிலைக் கட்டணம், பீக் அவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி, சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் (25.9.2023) வேலை நிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், ரூ.7 ஆயிரம் கோடி அள வுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சரிடம் முதல மைச்சர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, தமிழ் நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன் பரசன் மற்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிக ளுடன் நேற்று (26.9.2023) ஆலோசனை நடத்தினர்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச் சர் அறிவுறுத்தலின் பேரில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட் டது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 தொழில்முனைவோர் சங்கங்களை சேர்ந்த பிர திநிதிகள் பங்கேற்று தங்க ளது கருத்துகளை தெரிவித்தனர்.

பீக் ஹவர் கட்டணம் ஏற்கெனவே 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 சதவீதத்தையும் குறைக்க வேண்டும், 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், சோலார் மேற் கூரை அமைப்பதற்கான நெட்வொர்க் கட்டணத் தைக் குறைக்க வேண்டும், 12கி.வாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்க ளுக்கு 3-பி அட்டவணைக் குப் பதிலாக 3-ஏ என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள் ளிட்ட 5கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பீக் ஹவர் கட்ட ணத்தை ரத்துசெய்தால் அரசுக்கு ரூ.230 கோடி இழப்பு ஏற்படும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின் கட்டணம் குறை வாக உள்ளது.

ஒன்றிய அரசின் உதய் திட்டத்தில் சேர, மேனாள் முதலமைச்சர் கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கையெழுத்திடவில்லை. கடந்த ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்த தங்கமணி உதய் திட்டத்தில் கையெழுத்து இட்ட பிறகுதான் மின் கட்டணம் அதிகளவு உயர்ந் தது. இதற்கு ஒன்றிய அரசும், முந்தைய அதிமுக அரசும் தான் காரணம்.

-இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment