அதிகரிப்பால்...
ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை அதிகரிப்பதால் தான் அதற்கான தடை சட்டம் மாநிலத்தில் கொண்டு வரப் பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிகள்
சென்னை முகலிவாக்கம், மதனந்தபுரம், ராமாபுரம், மடிப் பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை அக்டோபர் 5ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அதி காரிகளுக்கு உத்தரவு.
விரிவான விசாரணை
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண் டர் முறைகேடு வழக்கு ஒரு வாரத்தில் பட்டியலிட்டு விரிவாக விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திறனறித் தேர்வு
தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கான திறனறித் தேர்வு இன்று தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment