காரைக்குடி, செப் 10 - நி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவரின் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளித்தார். இதில் பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்காதது, நாட்டின் பெரும்பான் மையாக உள்ள மக்களை மதிக்காததற்கு சமம் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிய அரசின் நடவடிக்கையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை; ஜனநாயக மில்லாத அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டில்தான் இதுபோன்ற செயல்கள் நடக்கும். அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment