குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி

திருச்சி, செப். 7-  பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறு வட்ட அளவிலான தடகள போட்டிகள் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 31.8.2023 முதல் 1.9.2023 வரை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட ஜோசிகா 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும், சங்கீதா 600 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும், சஞ்சனா சுதர்ஷினி சங்கீதா ஜோசிகா 4 ஜ் 100 தொடரோட்டத்தில் மூன்றாம் இடத்தையும், 17 வயதிற்கு உட்பட்ட சஞ்சீவ் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தை யும், 100 மீட்டர் மற்றும் 110 தடை தாண்டு ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும், பிரதீப் குமார் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதலில் இரண்டாம் இடத்தையும், டோனில் கிருஷ்ணன் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தையும் மற் றும் உயரம் தாண்டுதலில் 2ஆம் இடத்தையும், சஞ்சீவ், பிரதீப் குமார், சூரிய பிரகாஷ், டோனில் கிருஷ்ணன் 400 ஜ் 100 மீட்டர் தொடரோட்டத்தில் மூன்றாம் இடத்தையும், மனிஷ்யா குண்டு எறிதலில் 2ஆம் இடத்தையும், யுவசிறீ 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும், மினிசி 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும், தர்சினி வட்டு எறிதலில் மூன்றாம் இடத்தையும், சுபிக்ஷா தாண்டுதலில் மூன்றாம் இடத்தையும் ,19 வயதிற்கு உட் பட்ட பரத் 110 மீட்டர் தடை தாண்டு ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும், அருண் தேவன் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் மூன்றாம் இடத்தையும், அட்சயா வட்டு எறிதலில் 3ஆம் இடத்தையும், மற்றும் குண்டு எறி தலில் இரண்டாம் இடத்தையும், அன்சலேட்  ஈட்டி எறிதலில் முதல் இடத்தையும் மற்றும் குண்டு எறிதலில் மூன்றாம் இடத்தையும், பிரியதர்ஷினி மும்முறை தாண்டு தலில் இரண்டாம் இடத்தையும், சிவசக்தி 400 மீட்டர் தடை தாண்டு ஓட்டத்தில் 2ஆம் இடத்தையும், பிடித்து வெற்றி பெற்றனர். இதில் மேலும் முதல் இரண்டு இடம் பிடித்த மாண வர்கள் மாவட்டப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போட்டியில் வென்ற வீர ,வீராங்கனைகள் மற்றும் பயிற்று வித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளித் தாளாளர், முதல்வர், இருப்பால் ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினார்.

No comments:

Post a Comment