10.9.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
👉 ஜி-20 மாநாட்டிற்காக, குடிசைகள், விலங்குகளை மறைத்து உண்மை நிலையை மறைக்க வேண்டுமா? ராகுல் கேள்வி.
👉 பிரதமர் மோடி பேசும் வேற்றுமையில் ஒற்றுமை மொழி குறித்து மட்டுமே, மதங்களை அல்ல என்கிறார் அரசியல் விமர்சகர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉 2024 மக்களவை தேர்தலுக்காக பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளம் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதானது, ஜனதா தளம் (எஸ்) பாஜகவின் ‘பி-டீம்’ என்பதை நிரூபித்துள்ளது என்கிறார் கருநாடக முதல்வர் சித்தராமையா.
தி டெலிகிராப்
👉 “ஜி20 முழக்கம் ‘ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’. ஆனால், பிரதமர் மோடி உண்மையில் ‘ஒரு மனிதன், ஒரு அரசு, ஒரு வணிகக் குழு’ என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது,” என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.
👉ஜி-20 குழுவானது நபர்கள், மத சின்னங்கள் மற்றும் புனித புத்தகங்களுக்கு எதிரான அனைத்து மத வெறுப்பு செயல்களையும் கடுமையாக கண்டித்தது.
👉 டில்லியில் உள்ள "சர்வாதிகார" மோடி அரசை மக்கள் நிராகரித்துவிட்டனர், நாடு முழுவதும் ஏழு இடங்களுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சூலே பேச்சு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment