நகர்ப்புற குடியிருப்பு மறு சீரமைப்பு திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

நகர்ப்புற குடியிருப்பு மறு சீரமைப்பு திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம்

 சென்னை, செப். 3 - சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் 1959ஆம் ஆண்டு முதல் ராம்ஸ் ரியல் எஸ்டேட்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 50 லட்சம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை உருவாக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 400 குடியிருப்பு வளாகங்களைக் கட்டித் தந்துள்ளது.

எம்20 அர்பன் ஸ்பேசஸ் நிறுவனமானது மோகன் முத்தா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பணிகளை மேற்கொள் ளும் நிறுவனமாக செயல்படுகிறது. இக்குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இவ்விரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டு புதிய முயற்சியாக குடியிருப்பு வளாகங்களை மறு சீரமைப்பு செய்யும் திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளன. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் சதுர அடி பரப்பிலான குடியிருப்பு வளாகங்களை கட்டித்தர திட்டமிட்டுள்ளது என எம்.எம்.ஜி. குழுமத்தின்  செயல் இயக்குநர் சுரேஷ் முத்தா மற்றும் ராம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம் ரவிகிருஷ்ணன் ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment