தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் இரா. மாரிமுத்துவின் இணையர் மா.ஜெயலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு, இருவரும் உடல் மற்றும் உடல் உறுப்பு கொடைக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் படிவத்துடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துப் பெற்றனர். (30.08.2023, பெரியார் திடல்)
- - - - -
திருப்பூர் தெற்கு மாவட்டத் தி.மு.க. வர்த்தக அணி துணைத் தலைவர் வழக்குரைஞர் வி.பொன்ராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, பயனடை வழங்கினார். உடன் கோவி கண்ணன் மற்றும் வழக்கறிஞர் நீதிசெல்வன். (01.09.2023, பெரியார் திடல்).
- - - - -
திமுக மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். ஆசிரியர் அமுதரசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (31.08.2023, பெரியார் திடல்).
- - - - -
தின சக்தி பத்திரிகை ஆசிரியர் சந்திரசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். (31.08.2023,பெரியார் திடல்).
No comments:
Post a Comment