திருநெல்வேலி, செப். 5- பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரி கலையரங்கில், வரும், 22, 23, 24ஆம் தேதிகளில், உலக திருக்குறள் அய்ந்தாவது மாநாடு நடைபெற உள்ளது.
பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் தமிழ் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில், இந்த மாநாடு நடைபெற உள்ளது.
திருக்குறளை தேசிய நூலாகவும், உலக பொது மறையாகவும் அறிவிக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
ஆய்வறிஞர்களுக்கு ஆண், பெண் என்ற பிரிவில், தலா மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இம்மாநாட்டுக்கு கட்டுரை எழுத விரும்புவோர், 'வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி, பெண் சமுதாயம், ஆட்சியாளர் கடமை, இயற்கை, கல்வியின் சிறப்பு, முப்பாலின் வாழ்வியல் தத்துவம்' போன்ற தலைப்புகளில் தங்களின் கட்டுரைகளை, 'tலீணீனீவீறீtலீணீவீtக்ஷீust@ரீனீணீவீறீ.நீஷீனீ' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரும், 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment