அவரது உடல் 18.9.2023ஆம் தேதி பாப்பாரப்பட்டி இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு நண்பர்கள், ஆசிரியர்கள், அனைத்து கட்சியினர், வணிகர்கள், கழகத்தினர் மரியாதை செலுத்தினர். இரங்கல் கூட்டம் 11 மணியளவில் மாவட்ட கழகத் தலைவர் கு. சரவணன் தலை மையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் நல் கோபால், ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், ஓய்வு பெற்ற ஆசிரி யர்கள் சங்க நிர்வாகி கோவிந்தராசு, கூ.முனியப்பன், மாவட்ட கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், வீ.சிவாஜி, பொதுக் குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரி, தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் மருத்துவர் இரா. செந்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசன், திமுக சார்பில் உமா சங்கர், மாநில மகளிர் அணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைத்தலைவர் இ.மாதன், விடுதலை வாசகர் மாவட்ட தலைவர் கா.சின்னராஜ், வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா சரவணன், ஆகியோர் உரைக்குப் பின் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அறிவிப்பின் படி தலைமைக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் உரையாற்றி னார்.
தருமபுரி நகர தலைவர் கரு. பாலன், மாவட்ட செயலாளர் பெ.கோவிந்த ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் ஆறுதல்
வேட்ராயன் அவர்கள் வாழ் விணையர் ஆசிரியர் சகுந்தலா மற்றும் மகள்களிடம் கழகத் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கைப்பேசி வழியாக ஆறுதல் கூறி னார்.
அவர்களின் மகள்கள் கனி மொழி, மலர்விழி, கவியரசி, மரு மகன்கள் கண்ணன், கிருபாகரன், கோவிந்தன், மற்றும் உறவினர்கள் எங்களது தந்தையார், தந்தை பெரி யார் கொள்கையை ஏற்றுக் கொண்டு பகுத்தறிவாளராக இறுதி வரை வாழ்ந்தார்.
அவருடைய விருப்பத்திற்கு இணங்க எவ்வித மூட சடங்குமின்றி எளிய முறையில் உடலை அடக்கம் செய்யலாம் என்று அறிவித்தார் கள். அதன்படி எவ்வித சடங்கும் இல்லாமல் எளிய முறையில் அவர்களது மகள்கள் மற்றும் கழக மகளிர் தோழர்கள் உடலை சுமந்து சென்று நாகனம்பட்டி பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பங்கேற்றோர்
மாவட்ட பகுத்தறிவாளர்கள் தலைவர் கதிர்.செந்தில்குமார், செயலாளர் கே.ஆர்.குமார், வழக் குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன், மண்டல ஆசிரியர் அணி அமைப் பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மேனாள் மாவட்ட தலைவர் மு.பரமசிவம், சேலம் மாவட்ட பொறுப்பாளர் பூபதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, அரூர் மாவட்ட செயலாளர் சா.பூபதிராஜா, கழக நிர்வாகிகள் சென்றாயன், சுந்தரம், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மாணிக்கம், ஆசிரியர் அணி தலை வர் தீ.சிவாஜி, வினோபாஜி,
மு.சிசுபாலன், மாணிக்கம், சத்ய ராஜ், தேவேந்திரன், காமலாபுரம் தோழர்கள் ராஜா, சின்னசாமி, ராமசாமி, முத்து, கிருஷ்ணன், முருகன், பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி. கருணா நிதி, அரூர் மாவட்ட தலைவர்
கு.தங்கராஜ், பொதுக்குழு உறுப் பினர் இரா. சேட்டு அரூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் முல்லைமதி, கட மடை கோவிந்தராஜ், அழகேசன், சங்கரன், கிருஷ்ணகிரி பொதுக்குழு உறுப்பினர்கள் பெ. மதிமணியன், கோ.திராவிட மணி, ஓசூர்அ. செ. செல்வம், மாவட்ட, ஓசூர் மாவட்ட செயலாளர் சின்னசாமி, செல்வேந் திரன், கி.முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்டத் துணைத் தலைவர் வண்டி.ஆறுமுகம், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ், சங்கீதா, கவிதா மற்றும் தருமபுரி கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர் கழக மாவட்ட தோழர்கள் பங்கேற்றனர். விபத்து நடந்த இடம் முதல் மருத்துவமனை, உடல் வைக்கப் பட்ட இல்லம், அடக்கம் செய்யப் பட்ட நாகனம்பட்டி பண்ணை இல்லம் வரை இரண்டு நாட்கள் கழகத் தோழர்கள் உடனிருந்து பங்கேற்றனர்.
No comments:
Post a Comment