இதுதொடர்பாக நேற்று (31.8.2023) மும் பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் கூறிய தாவது:-
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை
ஜி20 மாநாடு நாட்டில் நடந்து வரும் நிலையில், அதானி குழும முறைகேடுகள் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளன. பிரதமருக்கும், அதானிக்கும் உள்ள தொடர்பை பத்திரிகைகள் வெளிப் படுத்தியுள்ளன. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாரு டையது?, அதானி பணமா அல்லது வேறு யாருடையதா?. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணம் தொடர்பாக விரிவான நாடாளு மன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை. யாருடைய பணம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். மோடி ஏன் மவுனமாக உள்ளார். இதை ஏன் அவர் விசாரிக்காமல் உள்ளார். அதானி விவகாரத்தில் உலகின் பிரபல மான பத்திரிகை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானி விவகாரம் விசாரிக் கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment