கலாஷேத்ரா பாலியல் விவகாரம் : புதிய திருப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

கலாஷேத்ரா பாலியல் விவகாரம் : புதிய திருப்பம்

சென்னை, செப்.9  பாலியல் தொல்லை விவகாரத்தில் மாணவி களுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்களை கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக் குரைஞர் தெரிவித்துள்ளார்.

சென்னை கலாஷேத்ரா கல் லூரியில் மாணவிகளுக்கு அங் குள்ள பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டி மாணவிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து பாலியல் குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அதில், கலா ஷேத்ரா அறக்கட்டளை இயக் குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெற்று இருந்தார். 

இதை எதிர்த்து, 7 மாணவிகள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், மாணவி களின் பிரதிநிதிகள், பெற் றோரின் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தனர். 

இந்த வழக்கு, நீதிபதி என்.சேஷசாயி முன்பு நேற்று (8.9.2023) விசா ரணைக்கு வந்தது. அப்போது கலாஷேத்ரா அறக் கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கலா ஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்புக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். 

மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.வைகை, "மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய நபரை கல்லூரி வளாகத்துக்குள் அனு மதிக்க முடியாது என தெரிவித்த கலாஷேத்ரா நிறுவனம், சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் குற்றம் சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை அழைத் துள்ளது. மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெ னவே உத்தரவிட்டுள்ளது. 

ஆனாலும், அதை மீறி பேரா சிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய் துள்ளது. 

தற்போது கலாஷேத்ரா வகுத் துள்ள கொள்கை மாணவிகள் மத்தியில் நம் பிக்கை ஏற் படுத்தும் வகையில் இல்லை" என்று கூறி னார். 

இதையடுத்து, மாணவிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு தொடர் பான கொள்கையில் மேற் கொள்ள வேண்டிய திருத் தங்கள் குறித்து ஆலோ சனைகள் அளிக்கும்படி இரு தரப்புக்கும் உத்தர விட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 

13-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


No comments:

Post a Comment