'துக்ளக்' 20.9.2023
நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய 'துக்ளக்' குருமூர்த்தியா இப்படிக் கூறுவது?
நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட தெல்லாம் குருமூர்த்திகளுக்கு மறந்தே போச்சோ?
டில்லி உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியுமான நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிராக ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் காரணமாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரியதால் விடுவிக்கப்பட்டாரா இல்லையா?
கடந்த 2018இல் அய்.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம் பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அப் போதைய டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. பா.ஜ.க. ஆதரவாளரான ஆடிட்டர் குரு மூர்த்தி சமூகவலைதளத்தில் நீதிபதி முரளிதர் பா.சிதம்பரத்தின் ஜீனியர் வழக்குரைஞர் என்று பதிவிட்டிருந்தார் - இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குருமூர்த்தியின் இந்த 'ட்வீட்டுக்கு' எதிராக வழக்குரைஞர்கள் சங்கத்தினர் டில்லி உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுள் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரான நீதிபதி முரளிதர் - ப.சிதம்பரத்திற்கும் தனக்கும் எந்த விதமான உறவும் இல்லை என்றும், அவரிடம் தான் ஜூனியராக பணி புரிந்ததில்லை - என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், குருமூர்த்தி நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த தோடு, அவதூறு பரப்பியதாக- குற்றம் சாட்டப்பட்ட அனைத்து ட்வீட்களையும் நீக்கியதாகவும், பிரமாண பத்திரம் தாக்கல் செய் தார். இதையடுத்து, குருமூர்த்தியின் மன்னிப்பு மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை டில்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிரான அவரது ட்விட் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கில் இருந்து குரு மூர்த்தியை விடுவித்துள்ளது. இது 13.7.2023 அன்று வெளி யான செய்தி.
இந்த யோக்கிய சிகாமணிதான் நீதிமன்றம் பற்றியெல்லாம் பேசுகிறார். இந்தக் கும்பலுக்கு மன்னிப்பு எல்லாம் அக்கார வடிசல் மாதிரி தானே!
No comments:
Post a Comment