விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
விருத்தாசலம், செப்.28- விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலம் பெரியார் தேநீர் விடுதியில் செப்டம் பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சே.பெரியார்மணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலு கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.
திராவிடர் கழகக் காப்பாளர் புலவர் வை.இள வரசன், மாவட்டத் தலைவர் அஇளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தங்க .இராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக் குரைஞர் ஆ.பிரபாகரன் தலைமையேற்று உரை யாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் கருத்துரையாற்றினார்.
இக்கூட்டத்தில் விருத்தாசலம் ஒன்றிய தலை வர் கி.பாலமுருகன், விருத்தாசலம் நகரத் தலைவர் ந.பசுபதி, திட்டக்குடி நகரத் தலைவர் பெ.அறிவு, பெண்ணாடம் நகரச் செயலாளர் அ. பச்சமுத்து, கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் த.தமிழ்ச்செல் வன், நல்லூர் ஒன்றியச் செயலாளர் நாராயணன், விருத்தாசலம் நகர செயலாளர் மு.முகமதுபஷீர், விருத்தாச்சலம் நகர அமைப்பாளர்
சு.காரல்மார்க்ஸ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பி.பழனிச்சாமி, பெண்ணாடம் நகர துணைச் செயலாளர் வழக்குரைஞர் வேலவன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.செந்தில், விருத்தாச்சலம் நகர இளைஞரணி தலை வர் கு.பிரவீன்குமார், விருத்தாசலம் நகர இளை ஞரணி செயலாளர் ப. பிரபாகரன், இளைஞரணித் தோழர்கள் புடையூர் வெங்கடேஷ், பாலாஜி, மாய வன், விருத்தாசலம் ப.ஆடலரசன், கங்கை அமரன், சபரி, பெரியார் பிஞ்சுகள் கபிலன், பொழிலன் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட.இராசா நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசின் 2023 ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்' விருது பெற்றுள்ள திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு வாழ்த்துகளையும், தமிழ்நாடு அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து தந்தை பெரியார் பட ஊர்வலத்தை சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்படுகிறது எனவும்,
திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில் 2023 அக்டோபர் 6 அன்று தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் நடைபெறும் டாக்டர் கலைஞர் நூற் றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழாவில் திரளாகப் பங்கேற்பது எனவும்,
ஸநாதன ஒழிப்பு குறித்து மிகத் தெளிவான கருத்துகளை விளக்கிப் பேசிய தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதய நிதி ஸ்டாலின் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
கழக இளைஞரணி அமைப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கிளைக் கழக நகரக் கழக ஒன்றிய கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது எனவும்,
ஒன்றிய பாஜக அரசின் ஊழல்களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில், கழக இளை ஞரணி சார்பில் மாவட்டம் முழுவதும் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment