குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் வீட்டு வசதி திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் வீட்டு வசதி திட்டம்

சென்னை, செப்.29  சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய வி.ஜி.என். ஹோம்ஸ் அம்பத்தூரில் 10.50 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த 252 பிரீமியம் வீட்டு மனைகளைக் கொண்ட வி.ஜி.என். கிளாசிக் என்ற பெரிய அளவிலான குடியிருப்புத்  திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்தத் திட்டம், தமிழ் நாட்டிலேயே இப்பகுதியில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் முதல் திட்டம் என்கிற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பூங்கா, மழைநீர் மேலாண்மைக்கான அதிநவீன வடிகால் அமைப்பு, பிரச்சினைகள் ஏதுமற்ற கழிவுநீர் சேகரிப்பு, நிலத்தடி மின்சாரம், டேட்டா கேபிள் உள்கட்டமைப்பு ஆகியவை  அடங்கும். இந்தத் திட்டம் ஒரு கேட்டட் கம்யூனிட்டி மாதிரியைப் பின்பற்றுகிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பை கண்காணிப்பு கேமரா மூலம் உறுதிசெய்கிறது என இந்நிறுவன மேலாண் இயக்குநர் வி.என். தேவதாஸ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment