பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெருவிழா

திருச்சி, செப்.19 -  திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்க ளின் 145ஆவது பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெரு விழா வாக  15.09.2023 அன்று கொண்டா டப்பட்டது. விழாவின் துவக்கமாக சமுதாயச் சிற்பி தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளினை மய்யப்படுத்தும் வகையில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 145 மரக்கன்றுகள் வழங்கும் விழா மற்றும் மரம் நடும் விழா காலை 9.30 மணியளவில் கல்லூரி வளாகத் தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் பெரியார் மருத்துவக்குழுமத்துடன் இணைந்து மனிதநேயப்பணியாக மாபெரும் பொதுமருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனைகள் நடைபெற்றது.  

சிறப்புக் கருத்தரங்கம்

அறுபெரும் விழாவின் தொடர்ச் சியாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள் சிறப்புக்கருத்தரங்கம் 10.30 மணியளவில் கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை இந் நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றி னார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந் தினர் அரசு பொது மருத்துவமனை யின் மேனாள் தலைமை மருத்துவ அலுவலரும் மயக்கவியல் மருத்து வருமான மருத்துவர் டி. அருமைக் கண்ணு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியார் அவர்கள் இளமைக் காலத்திலேயே பகுத்தறிவு சிந்த னையுடனும் முற்போக்கு சிந்தனை யுடனும்  திகழ்ந்ததை பல நிகழ்வுகள் கொண்டு விளக்கினார். பெண்ணு ரிமை போர்க்களத்தில் தந்தை பெரியார் அவர்கள் அளவிற்கு சிந் தித்த மற்ற தலைவர்களை நாம் காண முடியாது என்றும் ஆண் களுக்கு உள்ள அத்தனை உரிமைக ளையும் பெண்கள் பெறவேண்டும் என்று குரல்கொடுத்தவர் தந்தை பெரியார் என்றும் உரையாற்றினார். 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை 

ஜாதியின் பெயராலும் மதத் தின் பெயராலும் மனிதனை மனி தன் அடிமைப்படுத்தும் மூடநம்பிக் கைகளை களைய வேண்டும் என்று தள்ளாத வயதிலும் போராடிய தந்தை பெரியாரின் சிந்தனைகள் தான் அரசு திட்டங்களாக செயல் படுத்தப்பட்டன. 

அறிஞர் அண்ணா, முத்தமிழறி ஞர் கலைஞர் போன்றோரால் சுயமரியாதை திருமணம், பெண் களுக்கு சொத்துரிமை மற்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை போன்றவை நிறைவேற்றப் பட்டன. அறிஞர் அண்ணா  அவர்கள் இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று மரியாதை கொடுத்ததுடன்  பகுத் தறிவின் வழியில் ஆட்சியை நடத் தினார். தற்போது திராவிட மாடல் ஆட்சியில் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தில் நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிவருவதுடன் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழி காட்டும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

அய்யா தந்தை பெரியார் அவர் களின் அடிச்சுவட்டையொற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் பெரியார் அவர்களின் கொள் கைகளையும் சிந்தனைகளையும் மக்களிடத்தில் கொண்டுசேர்த்து வருகிறார்கள். பேச்சாளர், எழுத் தாளர், சட்ட வல்லுநர், ஆசிரியர், கல்வியாளர், பேரியக்கத்தின் தலை வர் போன்ற பரிமாணங்களில் திகழ்ந்து பெரியாரின் கொள்கை களை உலகமயமாக்கிவருகிறார். இன்று சட்ட நுணுக்கங்களையும், கூரிய அறிவாற்றலையும் கொண்டு தமிழ்நாட்டின் நல்திட்டங்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவர் நம் ஆசிரியர் அவர்கள் என்று உரை யாற்றினார். இத்தகைய தலைவரின் தலைமையில் நடைபெறும் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பெரியாரியல் புத்தகங்களை அதி கம் படிப்பதுடன் மற்றவர்களிடத் தில் அச்சிந்தனைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனை வர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மன்றச் செயலர் அ. சமீம் நன்றியு ரையாற்றினார். முன்னதாக  சமூக நீதிநாள் உறுதிமொழியினை அனை வரும் ஏற்றனர். திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மருத்துவ ஆய் வக தொழில்நுட்ப மாணவி   சி.வெள்ளிமலர் வைக்கம் 100 என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.   

திருச்சி, சுப்ரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார மய்யத்தின் மருத் துவர்கள் ரோகிதா என். துரை, மரு. ரஞ்சிதா, மரு. பிரசன்னா, சபரி மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து பொது மருத்துவ முகாம் மற்றும் பல் பரிசோதனை முகாம்களை நடத்தினர். கிருஷ்ணா மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் மரு. பரிமளாராணி  மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. மஞ்சுளா வாணி ஆகியோர் மகளிர் நல மருத்துவமுகாமினை நடத்தினர்.   எடிசன் பரிசோதனை மய்யத்தின்  ஆய்வக தொழில்நுட்பனர் மலர் மன்னன், க்யூமெட் மருத்துவ மனையின் தொழில்நுட்பனர்கள் வி. Òபுவனேஸ்வரி மற்றும் எம் பவித்ரா ஆகியார் இரத்த பரிசோ தனைகளை மேற்கொண்டனர்.  மேலும் திருச்சி, நாகமங்கலம் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்று நோய் மருத்துவமனையின் மருத்து வர்கள் மரு. ரூஹி பானு, மரு. ராசாத்தி மற்றும் மருத்துவக்குழு வினர் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொண்ட னர். 159 பேர் பொதுமருத்துவ முகாமிலும் 61 பேர் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனைகளையும் மேற்கொண்டு பயனடைந்தனர். 

மனிதநேயப் பணியான இம் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடு களை பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலு வலர் பேராசிரியர் அ. ஜெசிமா பேகம்,  ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாச் சலம், பெரியார் மருத்துவமனையின் செவிலியர் ஹெலன் மற்றும் குழு வினர் பிறந்த நாள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment