கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 4, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.9.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

👉நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு முன் நாளை "இந்தியா" கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம், காங். தலைவர் கார்கே அழைப்பு.

👉ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் பேசுகிறேன். "ஸனாதனம்" பற்றி நான் பேசியது சரியானதே, ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர் - உதயநிதி ஸ்டாலின்

👉 ஒன்றிய அரசின் பாரத்மாலா திட்டங்கள் பாஜகவின் நண்பர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தி அதிபர் ஆட்சியை கொண்டு வர மோடி சதி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கருத்தாக்கம்,  ஒன்றியங் களின் கூட்டமைப்பு இந்தியா என்ற கட்டமைப்பு மீது  நடத்தப்படும் தாக்குதல் என ராகுல் கண்டனம்.

தி டெலிகிராப்:

👉வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு மற்றும் கல்வியை பற்றி பேசாமல், ஸனாதன தர்மத்தை தேர்தல் பிரச்சினையாக மாற்ற பாஜக முயல்கிறது என்கிறார்கள் கட்டுரையாளர்கள் ஜே.பி.யாதவ், எம்.ஆர். வெங்கடேஷ்.

👉 நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து - பக்தர்கள் கூடிய மடமாக மாற்ற முயற்சி. குடியரசுத் தலைவர் தலையிட சி.பி.அய். எம்.பி. பினோய் விஸ்வம் கோரிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉ஆறாம் வகுப்பு படிக்கும் மூன்று முதல் நான்கு மாணவர்களிடம் “பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று மிரட்டிய கருநாடகாவின் ஷிவமொக்கா நகரில் உள்ள அரசு உருது பள்ளியின் ஆசிரியையை இடமாற்றம் செய்து அரசு நடவடிக்கை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment