சிபிஅய் தொடர் மறியல் போராட்டம் - 3 நாள்களில்
61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாநில செயலாளர் இரா.முத்தரசன் தகவல்
சென்னை,செப்.15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நேற்று (14.09.2023) தமிழ்நாடு முழுவதும் மூன் றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட மய்யங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கும், கூட்டாட்சி முறைகளுக்கும் ஏற்பட்டுள்ள பேராபத்தை தடுக்கவும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவது முன் தேவையாகியுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையில் பொது மக்களின் கவனத்தையும் ஆதரவையும் திரட்டும் வகையில் 12 முதல் 14 வரை மூன்று நாள் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தியது.
தமிழ்நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட மய்யங் களில் நடந்த போராட்டத்தில் 61 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனை வருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி தெரிவிப்பதுடன், கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
-இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment