திருவரங்கம், செப். 6 - திருச்சி திருவரங்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டத்துக் கான கலந்துரையாடல் கூட்டமாக திருவரங்கம் பெரியார் மய்யத்தில் திருவரங்க பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 3.9.2023. ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணிக்கு திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு திருவரங்கம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவது, திருவரங்கம் திருவானைக் காவல் பகுதிகளில் 30க் கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களில் புதிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங் குவது எனவும், திருவரங் கம் தந்தை பெரியார் சிலையில் மாலை அணி வித்துவிட்டு அனைத்து தோழர்களும் திருச்சி மத் திய பேருந்து நிலையத் திற்கு சென்று மாலை அணிவித்து அனைத்து தோழர்களுடனும் திருவ ரங்கம் தந்தைபெரியார் சிலைக்கு வருவதெனவும், பெரியார் பிறந்த நாள் அன்று கொடிகள் ஏற் றப்படும்.
திருச்சி மாவட்ட தலைவர் ஞா ஆரோக்கிய ராஜ், திருச்சி மாவட்ட செயலாளர் இரா. மோகன் தாஸ், திருவரங்கப் பகுதி தலைவர் சா. கண்ணன், திருவரங்கப் பகுதி செய லாளர் இரா முருகன், திருவரங்கம் பகுதி தலைவர் த. அண்ணாதுரை, கே. முருகேசன், எஸ்.கலியபெருமாள் மற்றும் அப்பகுதி தோழர்களும் கலந்து கொண்டு பெரியார் பிறந்த நாளை மேளதா ளத்துடன், உற்சாகமாக சிறப்பாக கொண்டாடு வது என முடிவெடுக்கப் பட்டது.
No comments:
Post a Comment