செந்துறை, செப்.22 - தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம், மாலை 6 மணியளவில், செந்துறை பேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது,
விடுதலை. நீலமேகன் மாவட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும், மு.முத்தமிழ்ச் செல்வன் ஒன்றிய தலைவர் வரவேற்றார்,
சு.மணிவண்ணன், காப்பாளர், சி.காமராஜ் பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட துணைத் தலைவர்கள், இரா.திலீபன், இரத்தின இராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் கள், மா. சங்கர், பொன்.செந்தில்குமார், தங்க. சிவமூர்த்தி மாவட்ட ப.க.தலைவர், க.தனபால், பேராசிரியர் ஆ.அருள் திமுக, இராசா. செல்வக் குமார் ஒன்றிய கழக செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ம.தி.மு.க. மாநில பொருளாளர் மு.செந்திலதி பன் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தந்தை பெரியார்தான் ஆட்சி செய்வார்; இதை யாராலும் மாற்ற முடியாது. நாட்டைவிட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சி பா.ஜ.க. எல்லோரும் ஒற்று மையுடன் இருந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதனை சாதித்துக் காட்டுவோம் என்றும், வைக்கம் போராட்டத்தின் மாட்சிகள் குறித்தும் தமது சிறப்புரையில் குறிப்பிட்டு பேசினார். ச.அ. பெருநற்கிள்ளி தி,மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், அரி யலூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர், கு.சின் னப்பா, தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் அங்கனூர் சிவக்குமார் வி,சி,க மாவட்ட செயலாளர், க. இராமநாதன் மதிமுக மாவட்ட செயலாளர், ம. கருப்புசாமி விசிக, செ.வெ.மாறன், செல்லம், கடம்பன் ஆகிய வி.சி.க. பொறுப்பாளர்கள் உட்பட அனைவரும் தமது கருத்துகளை எடுத்துரைத்தனர்,
கழகத் தோழர்கள், வெ.இளவரசன், சி.கருப்பு சாமி, க.கார்த்தி, ஆ.இளவழகன், லெ.தமிழரசன், சு.ச.திராவிடச்செல்வன், க.செந்தில், ஆசிரியர், இரா.இராசேந்திரன், செ.பரமேஸ்வரி, செ.இராதிகா, மு.எழிலரசி, இ.சத்தியா, மு.இரஜினி காந்த், தியாக. முருகன், மா.கருணாநிதி, சி.சிவக் கொழுந்து, இரா.இராமச்சந்திரன், பி.வெங்கடா சலம், வை.சுந்தரவடிவேல், க. சுப்பராயன்,
பூ.கலைமணி, வி.ஜி. மணிகண்டன் ஆகியோர் மற்றும் திமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்று சிறப்பித்தனர்,
காலை, 10 மணியளவில் செந்துறை தந்தை பெரியாரின் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். பூ. செல்வராஜ் திமுக, தெற்கு ஒன்றிய செயலாளர், வி.எழில்மாறன் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர், இந்நிகழ் வில் செ. இராதிகா மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர், 1000 லட்டுகள் கடைவீதியில் வழங்கினார்,
மாலை 5 மணியளவில் அண்ணா நகரிலி ருந்து காவல் நிலையம் வழியாக, மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் பட ஊர் வலம், சு.அறிவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தலைமையில், மேள இசை முழங்க பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்று கொள்கை முழக்கமிட்டு வந்தனர்.
கூட்டத்தின் நிறைவில் பழ.இளங்கோவன் செந்துறை நகர தலைவர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment