சுதந்திர தின நூற்றாண்டில் "இந்தியா" இருக்காது மாநிலங்களவை உறுப்பினர் வைகோ நாடாளுமன்றத்தில் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

சுதந்திர தின நூற்றாண்டில் "இந்தியா" இருக்காது மாநிலங்களவை உறுப்பினர் வைகோ நாடாளுமன்றத்தில் கண்டனம்

புதுடில்லி, செப். 20- இந்தியா என்ற பெயரை மாற்றுவதற்கு மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம்களை சனாதன கும்பல் அச் சுறுத்துகிறது எனவும் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் இன்று  (20.9.2023) வைகோ பேசிய தாவது:

1978ஆ-ம் ஆண்டில் முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தேன். 4ஆ-வது முறையாக தற்போது எம்.பி.யாக இருக்கிறேன். எத்தனையோ நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். இந்தியா என்ற பெயரை பாரத் என ஒன்றிய அரசு மாற்ற முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஜி20 உச்சி மாநாட்டில் பிரத மர் மோடி இருக்கைக்கு முன்பாக 'பாரத்' என எழுதப்பட்டிருந்தது. அப்படியானால் பிரதமர் மோடி, 'இந்தியாவின்' பிரதிநிதி இல் லையா? ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் இல்லையா? அப்படியானால் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந் தியா' என அழைக்கலாமே? நீங்கள் சொல்லுகிற பாரத் என்ற பெயர் எங்கிருந்து வந்தது? அந்த சனா தனம், உபநிஷத்துகளில் இருந்து வந்தது. இந்திய நாட்டை இந்து ராஷ்டிரமாக உருமாற்றுவதற்கு தான் பாரத் என்ற பெயரை வைக்கின்றனர்.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதி யாக சொல்கிறேன்.. ஒரு போதும் நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்தது கிடையாது; வரவும் முடியாது. குப்தர்கள் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தது கிடையாது; அசோகரின் மவுரியர்கள் தமிழ்நாட்டில் கால் வைத்தது கிடையாது. ஆனால் நாங்கள் கங்கையை வென்றெடுத் தோம்; இமயமலையில் வெற்றி கொடி நாட்டினோம்.

"இந்தியா" என்ற பெயரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? "இந்தியா" என்ற கூட்டணி உரு வாகி இருப்பது உங்களை எல்லாம் அச்சுறுத்துகிறது. ஆகையால்தான் "இந்தியா" என்ற பெயரை மாற்றி விட்டு 'பாரத்' என்ற பெயரை வைக்க முயற்சிக்கின்றனர்.  

இந்தியாவில் மதச்சார்பின்மை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக் கிறது. இஸ்லாமியர்கள் அச்சுறுத் தப்படுகின்றனர். சனாதன கும்பல் இஸ்லாமியர்களை அச்சுறுத்து கிறது. சனாதன சக்திகள்தான், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறு! முஸ்லிம்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என எச்சரிக்கை விடுத்து கொண்டிருக்கிறது. இந்த நாடு இந்துராஷ்டிரா மக்களுக்கானது என்கின்றனர்.

இப்படியே போய்க் கொண்டி ருந்தால் சோவியத் யூனியனுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவுக்கும் ஏற்படும்! சோவியத் யூனியனுக்கு என்ன நடந்தது? இந்தியாவும் பல நாடுகளாக சிதறிப் போகும். ஆகை யால்தான் இந்தியாவை ஆகக் குறைந்த பட்சம் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என அழைக்க வேண்டும் என்கிறேன். 

இல்லை என்றால் நூற்றாண்டு சுதந்திர நாள் விழாவை ஒன்று பட்ட இந்தியா கொண் டாட முடியாத நிலை உருவாகி விடும். இவ்வாறு வைகோ பேசினார்.

No comments:

Post a Comment