குளித்தலை, செப்.28- கரூர் மாவட்டம் குளித் தலையில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கருத்தரங்கத்தின் தொடக்கத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமாரசாமி ஸநாதன ஒழிப்புப்பற்றிய நீண்டதொரு விள க்கத்தை பல்வேறு தரவுகளில் இருந்து எடுத்து விளக்கினார். அவரைத் தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செய லாளர் முத்துகிருஷ்ணன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் சிவகுமார் பேசுகை யில், பகுத்தறிவு ஆசிரியர் அணியை மாவட்டம், ஒன்றியம், நகரங்கள் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆசிரியர் அணி தோழர்கள் பணியாற்ற வேண்டும் என்றார். மேலும் ஆசிரியர்களாகிய நாம் பாடத்திட்டத்தில் வரலாற்று திரிபு போன்ற செய்திகள் சேர்க்கப் படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண் டும் மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை யில் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரை யாடல் நடைபெற உள்ளதையும், அதனைத் தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில மாநாடு வெகு சிறப்பாக நடத்த வேண்டும் என்ற தனது எண்ணத்தையும், விருப்பத்தையும் வெளிப் படுத்தினார்.
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் தமிழ் பிரபாகரன் பேசுகையில், குளித்தலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுத்தறிவு ஆசிரியர் அணி கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த ஆசிரியர் அணி தோழர்களின் கடின உழைப்பை பாராட் டினார். பகுத்தறிவு ஆசிரியர் அணியின் தோற்றம், செயல்பாடுகள் அதன் முந்தைய பொறுப்பாளர் களான பேராசிரியர் நன்னன், இன்றைய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி போன் றோர்பற்றியும் அவர்களின் செயல்பாடுகள்பற்றி யும் விளக்கி கூறினார்.
அத்தகைய பகுத்தறிவு ஆசிரியரணியை இன்றைக்கு வழி நடத்துபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்றும், அவரின் சிறப்பாக நாங்கள் கருதுவது என்னவென்றால் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில் தனது கட்சி உறுப்பினர்களும் கூட்டணி கட்சித் தலைவர் களும் ஆசிரியர் வீரமணி அவர்களின் கருத்து களைத்தான் பின்பற்றி நடக்க வேண்டும் என் கிறார் என்ற உதாரணத்தை மேற்கோள் காட்டி பேசினார்.
தஞ்சை இரா. பெரியார் செல்வன் உரை
"தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு கல்வியும்" என்ற தலைப்பில் பேசத் தொடங்கிய தஞ்சை இரா. பெரியார் செல்வன் தந்தை பெரியார் அவர்கள் ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய உரையானது " பகுத்தறிவு சுடரேந்துவீர்" என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது என்றும் மாணவர்களிடம் புரட்சியை ஏற்படுத்த ஆசிரியர்களால் தான் முடியும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுகிறார் என்பதை கூறி புத்தகத்தில் இருந்து பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்.
க.ப. அறவாணன் எழுதிய "தமிழன் அடிமை யானது ஏன்.? " என்ற நூலை மேற்கோள் காட்டி 1901 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் எடுத்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் என்ற அதிர்ச்சித் தகவல் களை விவரித்துக் கூறினார்.
தமிழ் மன்னர்கள் ஒருவரும் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கான எந்தவித முன்னெடுப் பையும் எடுக்கவில்லை என்ற தகவலுடன் ராஜ ராஜ சோழன் கட்டிய சமஸ்கிருதப் பள்ளியில் படித்த 207 பேரும் பார்ப்பனர்கள் தான் என்று மன்னர் காலத்து கல்வி முறையின் கல்வி முறையை விளக்கினார்.
கருத்தரங்கில் புதிதாக கலந்து கொண்டவரின் கருத்து
அவரின் பேச்சை தொடர்ந்து பின்னூட்டமாக கருத்து கேட்கும் நிகழ்வாக ஆசிரியர் பாரூக் ஜான் பேசுகையில், பல்வேறு தகவல்களை பண்டைய கால கல்வி முறை முதல் காமராஜர் ஆட்சி முறை, தந்தை பெரியார் ஆற்றிய கல்விப்பணி, இன்றைய இந்துத்துவா ஆட்சியில் கல்வி ஒடுக்கு முறை பற்றி நாங்கள் இதுவரை அறியா பல்வேறு தகவல்களை இந்த கருத்தரங்கின் மூலம் தெரிந்து கொள்வதாக கூறினார். மேலும் இது போன்ற கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படுவதன் மூலம் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தான் கருதுவதாகவும் கூறினார்.
கருத்தரங்கில் திராவிடர் கழக மாவட்ட செய லாளர் காளிமுத்து, வழக்குரைஞரணித் துணைத் தலைவர் மு.க.ராஜசேகரன், சே.அன்பு, கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழ் பேரவை தலை வர் ஆசிரியர் அந்தோணிசாமி அவர்கள் நன்றி யுரை ஆற்ற கருத்தரங்க நிகழ்வானது சிறப்பாக முடிவுற்றது.
நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ரகுபதி, குளித்தலை வட்டார தலைவர் சுந்தரபாண்டியன், விடுதலை வாசகர் வட்ட கடவூர் மணிமாறன்,அறிவுக்கண்ணன், விடியல் விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள் பூபதி ராஜ்,கார்த்திக்,கரிகாலன்,பாபு மாற்றம் கார்த்திக், முருகேசன், பொன்னம்பலம், பெரியார் பிஞ்சு நிரூபன் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அறிவார்ந்த கருத்தரங்கத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த பகுத்தறிவு ஆசிரியர் அணி தோழர்களுக்கு இயக்க முன்னோடிகளால் பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment