தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை! சிவில் சர்வீஸ் துறைக்கு பார்ப்பனர்கள் அதிகம் வர வேண்டுமாம்! உலகளாவிய பார்ப்பனர்கள் சங்கமம் விழாவில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை! சிவில் சர்வீஸ் துறைக்கு பார்ப்பனர்கள் அதிகம் வர வேண்டுமாம்! உலகளாவிய பார்ப்பனர்கள் சங்கமம் விழாவில் முடிவு

பாலக்காடு, செப்.24  'பார்ப்பன சமுதாய இளம் தலைமுறையினர் அய்.டி., வேலைகளில் மட்டும் திருப்தி கொள்ளாமல் அய்.ஏ.எஸ்., போன்ற ஆட்சிப்பணித் துறை களுக்கு அதிகளவில் வர வேண்டும்' என பாலக்காட்டில் நடக்கும் உலகளாவிய பார்ப்பன சங்கமம் துவக்க விழாவில் தெரிவிக்கப் பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலை யரங்கில் கேரள பார்ப்பன சபை சார்பில் மூன்று நாட்களுக்கு நடக் கும் உலகளாவிய பார்ப்பனர்கள் சங்கமம் நிகழ்ச்சி கல்பாத்தி வேத பாடசாலை மாணவர்களின் வேத பாராயணத் துடன்,  துவங்கியது. 

தொடர்ந்து கேரளபார்ப் பன சபையின் துணைத் தலைவர் சுப்ர மணியன் வரவேற்றார்.

கேரள பார்ப்பனர் சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்து பேசியதாவது: 

தற்போதைய அய்.டி., வேலைகளில் மட்டும் திருப்தி கொள்ளாமல், அய்.ஏ.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் துறைகளுக்கு பார்ப்பன சமுதாய இளம் தலைமுறையினர் அதிகளவில் வர வேண்டும். 

கேரளாவில் நாம் ஒற்றுமையாக இருந்தால், தேர் தலில், 60 தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்களாக இருக்க முடியும். அனைத்து கட்சியினரிடமும் ஒரே மாதிரியான அணுகு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை பண்பு தேவை

சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகி கவுரிசங்கர், பார்ப்பன சங்கமம் நிகழ்ச் சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'கல்யாண் சில்க்ஸ்' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பட்டா பிராமன் பேசுகையில், ''இந்தியாவுக்கே பெயர் வாங்கி தரும் தஞ்சாவூர் 'சாஸ்திரா பல்கலை கழகம்' போல், கேரளாவிலும் நாம் ஒரு பல்கலைக் கழகம் துவங்க வேண்டும். அதற்கு உதவியளிப்பவர் களில் முன்னிலையில் நானும் இருப்பேன்,'' என்றார்.

கண்காட்சி துவக்கம்

பார்ப்பன சங்கமத்தை முன் னிட்டு கண்காட்சியை, 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் துவக்கி வைத்தார். 

கருநாடகா பார்ப்பன மகா சபை அமைப்புச் செயலர் ரவிகுமார், தமிழ்நாடு பிராமண சமாஜம் தலைவர் ஹரிஹரமுத்து, யோகக்ஷேம சபை தலைவர் அக்கீராமன் காளிதாச பட்டதிரிபாடு, வங்கதேச பிராமின் சம்சாத் ஆலோசகர் அமியா முகர்ஜி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வைத்தியநாதன், கேரளா பார்ப்பன சபை பொதுச் செயலர் சிவராமகிருஷ் ணன் பேசினர்.

தொடர்ந்து நவீன காலத்தில் வேத அறிவின் முக்கியத்துவம் குறித்த, விவாதமும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.


No comments:

Post a Comment