கவனத்திற்குரிய
முக்கிய செய்திகள்
20.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்னர், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மகளிர் இடஒதுக்கீடு அமலாக குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும் நிலை உள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சமூக நீதிக்கு மிகப் பெரிய தடைக்கல் பாஜக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெண்கள் இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு தர வேண்டும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை.
தி டெலிகிராப்:
* அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குர்மலி மொழி மற்றும் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் தங்கள் சமூகத்தை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 20 முதல் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டம் தொடங்குவோம் என குர்மி சமூகத் தலைவர்கள் மிரட்டல் .
- குடந்தை கருணா
No comments:
Post a Comment