'நீட்' தேர்வால் உயிர் மாய்த்த அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி 'நீட்' தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

'நீட்' தேர்வால் உயிர் மாய்த்த அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி 'நீட்' தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை

சென்னை, செப். 13- நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக் கும் நாளே அனிதாவுக்கு உண் மையான அஞ்சலி செலுத்தும் நாள் என்று நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்ட மன்ற உறூப்பினருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதிக்கு சென்றார். அங்கு, புனரமைக்கப்பட்ட ஆனந்தன் பூங்காவை திறந்துவைத்து, திரு.வி.க. நகர் பேருந்து நிலை யத்தை புனரமைக்கும் பணி மற்றும் 20 மறு சீரமைப்பு பணிகளை தொடங்கிவைத் தார். மேலும், அனிதா அச்சீ வர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணி னிகள் மற்றும் தையல் எந்திரங் களை அவர் வழங்கினார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நம்முடைய கொளத்தூர் தொகுதியில் இருக்கின்ற இளை ஞர்களும், மாணவர்களும் தங் களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக்கொண்டு, வேலை வாய்ப்பைப் பெற்றிடவேண் டும் என்கின்ற அந்த நோக்கத் தோடுதான், இந்த அகாட மியை, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்கிற பெயரில் நாம் தொடங்கினோம்.

நான் ஒவ்வொரு முறையும் இங்கே வந்து, இந்த நிகழ்ச்சி யில் எல்லாம் கலந்துகொண்டு, உங்களை எல்லாம் பார்த்து, இந்த உதவிகளை வழங்குகிற போது, இங்கே படித்ததால் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி சொல் கிறபோது, மறைந்த நம்மு டைய அருமை தங்கை அனி தாவைதான் ஒவ்வொரு முறை யும் நான் நினைத்து பார்ப்ப துண்டு. 'நீட்' என்ற கொடுமை யான தேர்வுக்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ, அன்றைக்குதான் நாம் அனிதா வுக்கு உண்மையான நினைவேந் தல் செலுத்தக்கூடிய நாளாக அது அமைந்திடமுடியும். 

'நீட்'டுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீ பத்தில் மறைவெய்திய ஜெகதீஸ்வரன் வரைக்கும் அந்த மாணவச் செல்வங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக் கிறார்கள்.

நம்முடைய அனிதா பெயரில் அச்சீவர்ஸ் அகாடமி தொடங்குவ தில் இருந்து, டேலி படிப்பைப் பொறுத்த வரையில், இதுவரை 9 கட்டங்கள் முடித்து, 743 மாணவிகள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக் கிறார்கள். ஆண்களில், இது வரை 5 கட்டங்கள் முடித்து, 381 மாணவர்கள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். இன் றைக்கு, மேலும் 136 மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப் டாப் வழங்கப்பட இருக்கிறது. தையல் பயிற்சியை பொறுத்த வரை, இதுவரை 5 கட்டங்களில் 1,467 பெண்கள் இலவசப் பயிற்சி முடித்து, சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத் திய இலவச தையல் எந்திரம் பெற்றிருக்கிறார்கள். 

இன்றைக்கு 6ஆ-வது கட்ட மாக 359 பெண்களுக்கு சான்றி தழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் எந்திரம் வழங்கப்பட இருக் கிறது.

தற்போது, 491 மாணவ-மாணவிகள் டேலி மற்றும் தையல் பயிற்சியை பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சி களை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத் துக்கொண்டு வருகிறது. பட் டப் படிப்புடன் சேர்ந்து இது போன்ற தனித்திறமைகள் இருந்தால்தான் வளர முடியும். அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுத்திருக்கி றோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில், அறிவாற் றலில் சிறந்தவர்களாகவும், தனித் திறமை கொண்டவர்களாகவும் வளரவேண்டும். அதற்காகத் தான் "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தொடங்கி வைத் தேன். இது என்னுடைய கனவு திட்டம். ஆண்டுக்கு, 10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம் பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டோம். எவ்வளவு? ஆண்டிற்கு 10 லட்சம் பேருக்கு திட்டமிட்டோம்.

ஆனால் கடந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைத் துக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின் பொருளாதாரத் தற்சார்பை உறுதிப்படுத்தக் கூடிய கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்னும் 3 நாட்களுக்குள், வரு கின்ற 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். இந்த திட்டங்களுக்குரிய நிதி ஒதுக் கீடு, அதாவது செலவை எல் லாம் கூட நாங்கள் செலவினங் களாக பார்க்கவில்லை. எதிர் காலத் தலைமுறைகளின் வளர்ச் சிக்கான முதலீடுகளாக நாங்கள் பார்க்கின்றோம். சொல்லப் போனால், இந்த திட்டத்தின் மூலமாக உதவித்தொகை கொடுக் கவில்லை; உரிமையை கொடுக் கின்றோம். இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக் கும், இந்தத் திட்டத்தில் தமிழ் நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண் கள் பயனடையப் போகிறார் கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடி குடும்பங் கள். இன்னும் பல தலைமுறை கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பர சன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment