தருமபுரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம் வழக்குரைஞர் வீரமர்த்தினி சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 1, 2023

தருமபுரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம் வழக்குரைஞர் வீரமர்த்தினி சிறப்புரை


தருமபுரி, செப். 1 - தருமபுரி  மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த டாக்டர் நரேந்திர தபோல்கர்   அவர்க ளின் நினைவு நாளை முன் னிட்டு 29.8.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில்  தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர் செந்தில் குமார் தலை மையில் நடைபெற்றது.

த.மணிவேல் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் சி.காமராஜ், மாவட்ட கழக காப்பா ளர் அ.தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் க. கதிர், மேனாள்  மாவட்ட இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன், மாரவாடி பிரகாஷ், ஊமை. காந்தி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். 

மாநில மகளிர் அணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை ஆகி யோர் கருத்துரையாற்றினர்.  

தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மூடநம்பிக்கை ஒழிப்புக்காக மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர்  அவர்களின் தொண்டை நினைவு கூர்ந்து பேசினார். அதைத்தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் வழக்கு ரைஞர் ஆ. வீரமர்த்தினி பேசும் போது, 

அறிவியல் வளர வேண்டும் மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்று மக்கள் மத்தியில் பேசி எழுதி வந்த அறிவிய லாளர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவாக கருத்தரங்கம் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் இங்கே வந்திருக்கிறார்கள் மகிழ்ச்சி யாக உள்ளது. 

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க வேண்டும். 1957ஆம் ஆண்டில் தான் பெண்கள் போராட முன் வந் தார்கள். அப்போது நடை பெற்ற சட்ட எரிப்புப் போராட் டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியானவர்கள் பெண்களாக இருந்தனர். அது திராவிடர் கழகத்திற்கு கிடைத்த பெருமையாகும். 

இன்றைக்கு அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கையை அறிவியல் துணைக் கொண்டே பரப்புகின்றனர். ஆயுதபூஜை யும் சரஸ்வதி பூஜையும் கொண் டாடதவர்களே அறிவியல் விஞ்ஞானிகளாக இருக்க முடியும். காளிகாம்பாள் கோயில் பூசாரி  தஞ்சை பெரிய கோவில் பூசாரியாகவும்,தஞ்சை பெரிய கோயில் பார்ப்பன அர்ச்சகர் காளிகாம்பாள் கோயி லுக்கும் மாற்றி போட்டால் பார்ப்பன அர்ச்சகரே கடவுள் இல்லை என்று சொல்லிவிடுவார். 

இன்றைக்கும் குற்றம் புரியும் சனாதானவாதிகளை தண் டிப்பதில்லை. பழைமைக்கு  எதிராக பேசிய எழுதிய அறிவியலை வளர்த்தவர்களையே அன்றைக்கு தூக்கிலிட்டு கொன்றிருக்கிறார்கள். உதாரணமாக சாக்ரடீஸ்  நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டார். புரூனோ  உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். கலிலியோ உலகம் தட்டை அல்ல உருண்டை என்று சொன்ன தால் கல்லால் அடிக்கப்பட் டார். அதன் பின் 360 ஆண்டு களுக்குப் பிறகு மதம் அறிவியல் இடம் மண்டி யிட்டு உலகம் உருண்டை என்பதை ஒப்புக்கொண்டது.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியை மாற்றி கல் என்றால் வீடு கட்டு,  புல்  என்றால் மாட்டுக்கு போடு என்ற நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார். பெண்களை அடிமைப்படுத்தி வாழ்ந்த சமு தாயத்தில் விடுதலை பெற வைத்தவர் தந்தை பெரியார். பெண்ணடிமை  ஒழிப்புக்காக வும் பெண் உரிமைக்காகவும் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். 

பெண்கள் படித்து வேலைக் குச் சென்றால் அதனால் வரு மானம் பெற்றால், சொந்த காலில் நின்றால், பெண் அடிமை கட்டாயமாக ஒழியும். ஜாதி மூடநம்பிக்கை பெண்ண டிமை ஒழிக்க இந்திய  அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது  ஆனால் சட்டத்தை மீறுபவ ராக பிரதமர் மோடி இருக் கிறார்,  சட்டத்தை மீறுகிறார். அரசியல் சட்டத்தை எழுதிய  அம்பேத்கர் படம் நீதிமன்றங் களில் வைக்கக்கூடாது என்று உத்தரவிடுகிறார்கள் அதை வழக்குரைஞர்கள் ஒன்று கூடி போராடி  வென்று காட்டினர். 

பெரிய அளவில் படிக்காத பெரியார், எம்.பி, எம்.எல்.ஏ, அரசியல்வாதி அல்லாத  பெரியாரால் தான் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. பெரியாரைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்று தந்தை பெரியாரை தினம் தினம் பேசி வருகிறோம். 

அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மட்டுமே கல்வி போதிப்பதால் வளர முடியாது பெற்றோர்களும் தன் குழந்தை களுக்கு அறிவியல் மனப்பான் மையை ஏற்படுத்தினால் மட்டுமே அறிவியல் வளரும்,  குழந் தைகள் அறிவாளிகளாக வள ருவார்கள் என்று தனது உரை யில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர் வாகிகள் மு.சிசுபாலன், மாணிக்கம், மகளிர் அணி  கோகிலா, ஆசிரியை சோபியா, நளினி கதிர், மாத.செந்தில் குமார். காமலாபுரம் இரா.சின்னசாமி, இரா. இராஜா, இரா.இராம சாமி, முருகன்  வரகூர் சிவ நாதன் ஆசிரியர் ராஜேஷ் குமார், ஆசிரியர் லட்சுமணன், ஆசிரியை கவிதா, ஆசிரியர் கணேசன்,அரூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் த. மு.யாழ்திலீபன், அரூர் மாவட்ட மாணவர் கழகத்   தலைவர் இ.சமரசம் ஆகியோர் கலந்து கொண்டனர்  மண்டல ஆசிரி யர் அமைப்பாளர் இர. கிருஷ் ணமூர்த்தி நன்றி கூறினார். 

No comments:

Post a Comment