திருப்பனந்தாள், செப்.27- பந்தநல்லூர் அருகே சித்து மாரியம்மன் கோவிலில் திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே நெய்க்குன்னம் பகுதியில் சித்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு கடந்த செப்.10 ஆம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. இரவு பூஜைகள் முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்றநிலையில் கோவில் பிரகார பகுதியில் இருந்த திரைச்சீலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பக்தர்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து பந்தநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருவிடைமருதூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தீப்பிடித்து எரிந்த திரைசீலை அருகே பெட்ரோல் பாட்டில் திரியுடன் கிடந்ததாக கூறப்படுகிறது. நிகழ் விடத்தில் தட யவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை மறைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment