திருப்போரூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி ஆடை போர்த்திய காலிகள்
செங்கல்பட்டு, செப்.29 திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி யுள்ள பேருந்து நிலையம் அருகே, எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலை உள்ளது.இந்த சிலையின் கழுத்துப் பகுதியில், காவி சால்வை அணிவித்து, வலது கையில் காவித் துண்டு கட்டப் பட்டிருந்தது. இதையறிந்த அ.தி.மு.க., வினர் அங்கு திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், திருப்போரூர் காவல்துறையினர் பேச்சு நடத்தினர்.
சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த காவி சால்வையை காவல்துறையினர் அகற்றினர். எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி சால்வை அணிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment