கிராமசபை
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 13,525 ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், அக்டோபரில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் களுக்கு ஊராட்சி இயக்க இயக்குநர் பொன்னையா உத்தரவு.
வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான வளாக நேர்க்காணலில் இந்த வருடம் பிஇ படிக்கும் மாணவர்கள் 85 சதவீதம் பேர், எம் இ படிக்கும் 50 சதவீதம் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல்.
தொழிற்சாலைகள்
திருச்சி, கோவை மற்றும் தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்.
பரிந்துரை
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாள் களுக்கு வினாடிக்கு 3000 கன அடி என்ற வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங் காற்று குழு 26.9.2023 அன்று பரிந்துரை செய்துள்ளது.
ஆன்லைனில்...
அக்டோபர் 1ஆம் தேதி முதல், குடிநீர் வரி, கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மய்யங்கள், டிஜிட்டல், காசோலை மற்றும் வரை வோலைகளாக மட்டுமே செலுத்த வேண்டும். ரொக்க மாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரி யம் தெரிவித்துள்ளது.
பெறக்கூடாது
அரசு பேருந்து நடத்துனர்கள் வரும் 28ஆம் தேதி பயணிகளிடம் இருந்து ரூ.2000 நோட்டுகளை பெறக் கூடாது யாரேனும் பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நடத்துநரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்வாக இயக்குநர் அனைத்து கோட்ட மேலா ளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment