வடமணப்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

வடமணப்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு

வடமணபாக்கம், செப். 24 - செய்யாறு கழக மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் வடமணப்பாக்கத்தில் தமிழர் தலைவர்  அவர்களால் 1992ஆம் ஆண்டில் திறக்கப் பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை தற் போது புனரமைக்கப்பட்டது. 

புத்தாக்கமான பெரியார் சிலையை தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 9 மணியளவில் செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஓ.ஜோதி அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் திறந்து வைத்தார்.

தந்தை பெரியார் அவர் களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புனரமைக்கப்பட்ட பெரியார் சிலை திறப்பு விழா, முத்தமிழறிஞர் டாக்டர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, தேசிய மாநில விருது பெற்ற நல்லாசிரியர் பி.கே.விஜய ராகவன் அவர்களின் நினைவுக் கொடிக்கம்பம் நிறுவும் விழா, தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு ஆகி யோரின் வாழ்த்துகளுடன் செய்யாறு அடுத்த வெம்பாக் கம் ஒன்றியம் வடமணப்பாக்கம் பெரியார் சாலையில் இம்முப் பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம் வட மணப்பாக்கத்தில் ரூபாய் மூன்று லட்சம் செலவில் இந்த பெரியார் சிலை புனரமைக்கப் பட்டுள்ளது.

திராவிடர் கழகத்தின் சார்பாக இச்சிலை கடந்த 31 ஆண் டுகளுக்கு முன்பு 15.1.1992ஆம் அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக் கப்பட்டது. அப்போ தைய மாவட்டத் தலைவர் செய்யாறு பா.அருணாசலம் தலைமை யில், பொதுக்குழு உறுப்பி னர்கள் வேல்.சோம சுந்தரம், டி.பி.திருச்சிற்றம்பலம் முன் னிலையில் திறந்து வைக்கப்பட் டது.

பெரியார் முழு உருவச் சிலையின் பீடம், மதிற்சுவர், படிக்கட்டுகள் சிதிலமடைந்த நிலையில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கிரானைட் கற்களால் நான்கு பக்கங்களி லும் கல்வெட்டுகள் அமைக்கப் பட்டு பெரியார் பொன்மொழி களும் இடம் பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி தலைமை வகித்தார். 

செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ,இளங் கோவன் வரவேற் புரையுடன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அசனமாப் பேட்டை ஆர். வேல்முருகன், கே.ஆர்.சீதாபதி, மாவட்ட ஊராட்சிச் குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக் குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, ஒன்றிய திமுக செயலாளர்கள் எம். தினகரன், ஜே.சி.கே.சீனி வாசன், என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வி.வெங்கட்ராமன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பொன்சுந்தர், வடமணப்பாக் கம் கழகத் தலைவர் மு.வெங்க டேசன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் என்.வி.கோவிந் தன், செய்யாறு தங்கம் பெரு மாள், பெருங்களத்தூர் வெங் கடேசன், பொக்கசமுத்திரம் பரந்தாமன், வடமணப்பாக்கம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சி.சிவப்பிரகாசம், சிறுநல்லூர் பு.சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்க டேஷ் பாபு, செய்யாறு நகர மன்ற தலைவர் ஆ.மோகன வேல், நகர செயலாளர் கே.விஸ்வநாதன், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் ந.கலைஞர் பாஸ்கரன், இரா ணிப்பேட்டை கழக துணை செயலாளர் பொன்.வெங்கடே சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் செய்யாறு மு.செல்வகுமார், துணை அமைப்பாளர் பிரம்மதேசம் செந்தில், தி.மு.க. இளைஞரணி தே.வா.ராஜேஷ், இணை செயலாளர் ல.வெங் கடேசன், பொன்.கணேசன், நா.பூபதி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் பெ.இளஞ்செழியன், பேரா.மு.தமிழ்மெழி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

நல்லாசிரியர் பி.கே.விஜய ராகவன் நினைவுக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியேற் றப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

முடிவில் செய்யாறு, நகர திராவிடர் கழகத் தலைவர் தி.காமராசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment