இவர்கள் தங்களது மதப் போர்வையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசின் பின்னால் இருந்துகொண்டு அனைத்து மாநில அரசுகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கிக் குவித்துள்ளனர். அந்த நிலங்களில் பெரிய பெரிய பசு பாதுகாப்பு என்ற பெயரில் கோசாலை கட்டியுள்ளனர்.
அவர்களின் அழைப்பிற்கு இணங்க நான் அமைச்சராக இருந்த போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தப்பூர் நகரில் இருக்கும் இஸ்கான் அமைப்பின் கோசாலைக்குச் சென்றேன், அங்கே கன்றுக்குட்டிகள் மற்றும் உடல் நலிந்த ஒரு பசுமாடு மாடு கூட இல்லை. கோசாலை என்றால் கைவிடப்பட்ட, நோயுற்ற உடற்குறைபாடுடைய பசுக்களைப் பாதுகாப்பதுதான் அதன் பணி - ஆனால் அங்கே நவீன பால்பண்ணை போன்று இயங்கிக் கொண்டு இருந்தது. அங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் பால் மற்றும் அதன் மூலம் வரும் பணம் பணம் மட்டுமே குறிக்கோள்.
அங்கே கன்றுக்குட்டிகளையும் நோஞ்சான் மாடுகளையும் பால் வற்றிய பசுக்களையும் இறைச்சிக்காக விற்று விடுகின்றனர். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக இருந்தது. விசாரித்த போது இந்தியா முழுவதும் இவர்கள் இதையேதான் செய்கிறார்கள்.
அதாவது இவர்கள் கோசாலை என்ற பெயரில் பால்பண்ணைகளை உருவாக்கி பணம் பார்க்கின்றனர். கோசாலை பராமரிப்பு என்ற பெயரில் அரசிடம் நிலம் மற்றும் நிதி உதவி, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை, பொதுமக்களிடமிருந்து வழிப்பறிபோன்றே நன்கொடை பெறுகிறார்கள்.
அதை எல்லாம் பால்பண்ணையை மிகவும் நவீனமயமாக்கவே பயன்படுத்துகிறார்கள்
தெருவில் 'ஹரே ராதா ஹரே கிருஷ்ணா' என்கிறார்கள். ஆனால் இவர்கள் நாடு முழுவதும் பசுக்களை இறைச்சிக்காக விற்பனை செய்கின்றனர். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக இருந்தது.
இந்தியாவிலேயே அதிக அளவில் இவர்கள் பசுக்களை இறைச்சிக்காக விற்பனை செய்கின்றனர். கொடையாக பெறப்பட்ட மாடுகளில் ஆரோக்கியமான மாடுகளை பாலுக்காக வைத்துக்கொண்டு அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்கள்.
(மேனாள் பாஜக ஒன்றிய அமைச்சரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி.)
No comments:
Post a Comment