இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தா மரை வரவேற்புரையாற்றினார். இவ்விழாவின் சிறப்பு
விருந்தினாக திருச்சி மேற்கு மண்டல மருந்துக் கட்டுப்பாட் டுத்துறை ஆய்வாளர் ஆர். உமாமகேஸ்வரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். அவர் தமது உரையில் அதிக போட்டியும் சவால்க ளும் நிறைந்த மருந்து கட்டுப் பாட்டுத்துறையில் தாம் தைரி யமுடனும் துணிச்சலுடனும் செயல்பட காரணமாக இருந் தது தற்தை பெரியார் அவர் களின் கொள்கைகளும் அவர் பெயரிலான இப்பெரியார் மருந்தியல் கல்லூரி அளித்த மருந்தியலுடனான வாழ்விய லும் என்று தமதுரையினை துவங்கி, மருந்தாளுநர்கள் தமது கடமைகளில் கவனமுட னும் பொறுப்புடனும் திகழ வேண்டும். நல்வாழ்வுத் துறை யில் நாம் செய்யக்கூடிய சிறு தவறும் ஒட்டுமொத்த துறை யின் புகழையும் சீர்குலைப்ப துடன் மனித உயிரிழப்புக்க ளையும் ஏற்படுத்தும். இன் றைய சூழ்நிலையில் உலகத் திற்கே வழிகாட்டக்கூடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கூறிய மனிதநேயத்துடன் நம்முடைய பணிகளில் ஈடுபட்டால் நிச்ச யம் மருந்தியல் துறை மிகப் பெரிய சாதனைகளை படைக் கும் என்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியில் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் பெரியார் மருந்தி யல் கல்லூரியின் மேனாள் மாணவிகளும் மருந்தாளுநர் களுமான ஆர்.கலைவாணி, வி.துர்கா செல்வி, ஆர்.செந்தில் செல்வி, வி.மல்லிகா மற்றும் ஆர். கண்ணகி ஆகியோர் கலந்து கொண்டு நல்வாழ்வுத் துறையில் மருந்தாளுநர்களாக செயல்படக்கூடிய தங்களின் பணி அனுபவம் குறித்து விளக் கியதுடன் அவர்கள் சிறந்து விளங்குவதற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியும் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை சிந்தனைகளும்தான் காரணம் என்று தெரிவித்தனர். அது மட்டுமல்லாது இந்த ஆண்டிற் கான சுதந்திர நாள் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த மருந்தாளுநருக்கான விருது கள் பெற்ற நான்கு பேருமே பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் என்பது பெரு மைக்குரியது என்றும் தெரிவித்து அனைவருக்கும் மருந்தா ளுநர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக பேராசிரியர் கே.ஏ.எஸ். முகமது சபீஃக் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment