முழுமையாக நிரம்பிய பூண்டி ஏரி, கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

முழுமையாக நிரம்பிய பூண்டி ஏரி, கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பு

திருவள்ளூர், செப். 26- திருவள்ளூர் அருகே சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது.இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும்.  இதன் முழுக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும்.இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி (25.09.2023) நீர் இருப்பு 34 அடியாகவும், கொள்ளளவு 2823 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதோடு பூண்டியில் நீர் வரத்து 1,520 கன அடியாக உள்ளது.

இந்த நிலையில், நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து  அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.இதைத்தொடர்ந்து, நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ் தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ் ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான் குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரை யின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப் பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment