துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர் போக்குக்கு கல்லூரிப் பேராசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர் போக்குக்கு கல்லூரிப் பேராசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு

சென்னை, செப் 10 உயர்கல்வி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதை மட் டுமே ஆளுநர் குறிக்கோளாக கொண்டுள்ளார் என்று மக்கள் கல்வி கூட்டு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

தமிழ்நாடு மக்கள் கல்வி கூட்டு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர்களான பேராசிரி யர்கள் முரளி, அரசு உள்ளிட் டோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆளுநர் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகிய 3 பல்கலைக் கழ கங்களுக்கான துணைவேந்தர் நியமனத்துக்கான தேர்வுக் குழுவில் பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதி ஒருவரையும் இணைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் ஆளுநராக பொறுப்பேற்ற தில் இருந்து இதுவரை பல் கலைக்கழகங்களில் துணைவேந் தரை நியமிக்கும் போது இந்த விதிகளை குறிப்பிடவில்லை. ஏற்கெனவே, ஆளுநரின் பிரதிநிதி ஒருவர் இந்த துணைவேந்தர் தேடல் குழுவில் உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழகங்களின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாமல் போகும் நிலை உருவாகிறது. 

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வழக்கு ஒன்றில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து முடிவு எடுக்காதவரை பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் இந்த மாநிலத்திற்கு செல்லுபடியா காது என்று தீர்ப்பளிக்கப்பட் டுள்ளது.  கடந்த 2022-இல் தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையிட முடியாது என்ற தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். தமிழ்நாடு மக்க ளின் கல்வி உரிமையை தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட சட்ட மன்றம்தான் தீர்மானிக்க வேண் டும். கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.57,500 மாதாந்திர ஊதியமாக வழங்க வேண்டும் என்று பல் கலைக்கழக மானிய விதிகளில் உள்ளது. அதாவது, தமிழ்நாட் டிற்கு எதிராக செயல்படுவதை மட்டுமே ஆளுநர் குறிக்கோளாக கொண்டுள்ளார் என தெரிகிறது. 

மாநில அரசிடம் ஆலோ சனை செய்யாமலும், பல்கலைக் கழகங்களில் ஏற்கனவே உள்ள சட்ட விதிகளை மதிக்காமலும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருவது மக்கள் விரோத மாகும். தமிழ்நாட்டின் உயர் கல்வி விவகாரத்தில் அரசியல் ரீதியாக ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது மாநி லத்தின் கல்வி உரிமையை கடுமையாக பாதிக்கும். எனவே, துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் ஆளுநரின் தன் னிச்சையான முடிவை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment