கனடிய சீக்கியரை திட்டமிட்டு கொலை செய்த இந்திய புலனாய்வு (ரா) அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

கனடிய சீக்கியரை திட்டமிட்டு கொலை செய்த இந்திய புலனாய்வு (ரா) அமைப்பு

கனடா நாட்டு இந்தியத் தூதரை வெளியேற்றிய கனடியப் பிரதமர்

டொராண்டோ, செப்.19  இந்தியா விற்கு அடுத்தபடியாக கனடாவில் அதிகம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் சீக்கியர்களின் குழுக்கள் மீது சந்தேகத்தின் அடிப் படையில் சில ஹிந்துத்துவ ஆதரவு அமைப்புகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள சீக்கியர்களைத் தாக்கி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் என்று குற்றஞ் சாட்டி தாக்கப்படும் இந்த தாக்குதல் இந்திய புலனாய்வு அமைப்பின் தூண்டுதலில் நடைபெறுவதாக உலகம் முழுவதும் பொதுவான குற்றசாட்டு  

 அதே போல் இந்தியா சீக்கிய பயங்கரவாதிகள் குறித்து சில அறிக் கைகளை கனடாவிடம் ஒப்படைத் தது. இந்த அறிக்கை குறித்து கனடா விரிவான ஆய்வு செய்து வருகிறது. மேலும் கனடா எந்த ஒரு பயங் கரவாத அமைப்புக்கும் ஆதரவு அளிக்காது என்றும்  ஒடுக்கப்பட்ட மக்கள் உலகில் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு கனடா துணை நிற்கும் என்று கனடா பிரதமர் இந்தியாவிற்கு பதில் கூறியிருந்தார்

இருப்பினும் இந்தியா  மறைமுக மாக கனடா நாட்டில் உள்ள சீக்கியர்களை கண்காணித்து வந் தது, இது கனடா இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகும். இது தொடர்பாக கனடா எச்சரிக்கை விடுத்தும் இருந்தது. 

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஜூன் மாதம் காலிஸ்தான் என்ற அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. 

இது தொடர்பாக கனடா பிரதமர் ஜி20 மாநாட்டிற்கு வருகை தந்த போது பேச முற்பட்டார். ஆனால் மோடி கனடாப் பிரதம ரிடம் பேசாமல் தவிர்த்துவந்தார். மேலும் ஊடகவியலாளர் சந்திப் பையும் அனுமதிக்கவில்லை. இத னால் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடனடியாக மாநாட்டில் இருந்து வெளியேறி கனடா சென்றுவிட்டார்

இந்த நிலையில், இந்தியாவின் தூதர உயர்  அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. ஏற்க னவே இந்தியா- கனடா இடையிலான  உறவில் விரிசலாக உள்ள நிலையில் ஏற்பட்டுள்ளது. இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இந்த நிலையில்  இந்தியா வுடனான உறவுகள் குறித்து சிறப்பு ஒருநாள் நாடாளுமன்றக் கூட்டம் நடந்தது அதில் பேசிய கனடியப் பிரதமர்  ''நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்ட்-களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச் சாட்டு உள்ளன.

கனடா மண்ணில் கனடா குடிமகனைக் கொலைசெய்ய திட்ட மிட்டு செயல்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு உள்ளதாக புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது  எங்கள் நாட்டு விவகாரத்தில் இந் திய அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது கனடா வின் இறையாண்மையை மீறுவ தாகும். இந்த விசயத்தை தெளிப் படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும்'  என்றார்.

கனடா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்  மெலானி ஜூலி  கூறும் போது ''ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதி காரியை நாட்டில் இருந்து வெளி யேற்றியுள்ளோம். அவர் இந்தியா வின் வெளிநாடு புலனாய்வு அமைப் பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரி வின் (ஸிகிகீ) தலைவராக செயல் பட்டவர்'' என்றார்.

 

No comments:

Post a Comment