மேனாள் மேயர் என். சிவராஜ் பிறந்த நாள் - கழகம் சார்பில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

மேனாள் மேயர் என். சிவராஜ் பிறந்த நாள் - கழகம் சார்பில் மரியாதை

மேனாள் மேயர் என்.சிவராஜ் அவர்களின் 132-ஆம் பிறந்த நாளையொட்டி (29.09.2023) சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,   காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி. திராவிடமணி, தலைமைக் கழக அமைப்பாளர் 

வி. பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன்,  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், கழகப் பேச்சாளர் தி. பிராட்லா என்னாரெசு,  க. கலை மணி, வடசென்னை மாவட்ட மகளிரணிச் செயலாளர் த. மரகதமணி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment