தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? சென்னையில் இன்று ஒத்திகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? சென்னையில் இன்று ஒத்திகை

சென்னை, செப்.15  தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அதை முறியடிப்பது எப்படிஎன்பது குறித்த ஒத்திகை சென்னையில் இன்று (15.9.2023) நடத்தப்படுகிறது. ஒத்திகையின்போது பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

2008 நவம்பர் 26-ஆம் தேதி கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் கொல்லப்பட்டனர். 238 பேர் காய மடைந்தனர். 

இதையடுத்து, தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் நுழைய முடி யாதபடி பாதுகாப்பு மற்றும் கண் காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

கடல்வழி பாதுகாப்பும் அதிகரிக் கப்பட்டுள்ளது. அதையும்தாண்டி தீவிரவாதிகள் நுழைந்துவிட்டால் அவர்களை வீழ்த்திவிட்டு பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து காவல்துறையினர் அவ்வப்போது ஒத்திகையை நடத்தி வருகின்றனர். அதன்படி, காவல் துறை உட்படபிற துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்புப் படையினர் (ழிஷிநி) சென்னையில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை 3 நாட்கள் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதை முறியடிக்கும் ஒத்திகை பயிற்சியை நடத்துகின்றனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று (14.9.2023) காலை நடைபெற்றது. இதில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல்காவல்துறை தலைமை இயக் குநர்  அருண், உளவுத் துறை காவல்துறை தலைவர்  செந்தில் வேலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 சென்னை பெருநகரில் 7 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் பயங் கரவாத தாக்குதல் ஒத்திகை மற்றும் 3 இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி இன்று மதியம் 3 மணிமுதல் நடைபெற உள்ளது. சென்னை பெருநகர காவல் துறை, தமிழ்நாடு கமாண்டோ படை,தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, மருத்துவத் துறை மற்றும் பிற அரசுத் துறைகளுடன் இணைந்து நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இப்பயிற்சியானது காவல் துறையின் நெருக்கடிக் கால திறன் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் வழக்க மான பயிற்சியாகும். எனவே, பயங்கர வாத தாக்குதல் ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் போது, பொதுமக்கள் யாரும் பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம். இது தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்கு சென்னை பெருநகர காவல் துறை அவசர உதவி எண்.100, 101, 112 மற்றும் 044-23452359 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment