புதுச்சேரியில் கருத்துரிமைக்குத் தடை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

புதுச்சேரியில் கருத்துரிமைக்குத் தடை!

புதுச்சேரி, செப். 25- 23.9.2023 அன்று மாலை 6 மணி அளவில் புதுச் சேரி, அரியாங்குப்பம் .மேரி தெரு .தங்கவேலு பாஞ்சாலி அரங்கில் ஸநாதனம் குறித்த கருத்தரங்கு நடைபெற இருந்த நிலையில் அரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொண் டிருந்த வேளையில் அங்கு வந்த அரியாங்குப்பம் காவல்துறையினர் ஸநாதனம் குறித்து நீங்கள் பேசக்கூடாது!

உதயநிதி படத்தை பயன் படுத்தக்கூடாது என்றும்,  கருத் தரங்கத்தை இங்கு நடத்தக் கூடாது, பேசக்கூடாது மேல் அதிகாரிகள் உத்தரவு - எனவே நிகழ்வை  நிறுத்த வேண்டும் என் றும் வலியுறுத்தினர்.

அரசாணை ஏதேனும் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டதற்கு காவல்துறையினர் அதைக் கொடுக்க மறுத்தனர் ஸநாதனம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. உதயநிதி படத்தை போடக்கூடாது என்று காவல்துறையினர் சொன்னார் கள். அதற்கு ஆதாரத்தைக் கொடுங்கள்; குறைந்தபட்சம் ஏன் நடத்தக் கூடாது?  நாங்கள் ஏன் தடை விதிக்கிறோம் என்று எழுத்து வடிவமாக பதிவு செய்து கொடுங்கள் என்று பொறுப் பாளர்கள் கேட்டனர்.

காவல்துறையினர் தர மறுத்து மேலதிகாரி உத்தரவு  நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். நிலைய அதிகாரிகளிடம் கேட்டதற்கும் அவர்கள் வாய் திறக்காமல் நிகழ்வை தடுப்பதிலேயே குறியாக இருந்து அரங்கத்தின் உரிமையாளரை மிரட்டி, அரங் கக் கதவை ஊழியர் மூலமாக  பூட்டி  சாவியை எடுத்துச் சென்று விட்டனர். அரங்க காப்பாளரை யும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்

நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது; ஏன் பூட்டிச் சென்றீர்கள்? எந்த அடிப்படை யில் நீங்கள் இதை செய்கிறீர்கள் என்று கேட்டபோது, கருத்தரங் கம் நடத்தினால்  கைது செய் வோம் என்றனர் காவல்துறையினர். அரங்க உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்வோம்.

பேச்சாளர் மதிமாறன் வந் தால் கைது செய்வோம் என்று மிரட்டி சென்றுவிட்ட நிலை யில் - அரங்கத்தின் வாசலில்  சாலை யில் தடையை மீறி நடத்துவது 

கைது சிறை என்றால் சந்திப் பது என தோழர்களுடன் பேசி முடிவு   செய்யப்பட்டு அய்ந்து மணிக்கு ஒன்று கூடினர்.

காவல்துறை கண்காணிப் பாளர், ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட  காவலர்கள் வாகனங் களோடு குவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியை அரங்கத்தின் வாயில் சாலையிலே பதாகை அமைத்து தொடங்கி பேச ஆரம்பித்த நிலையில் அவர்க ளைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஸநாதன எதிர்ப்பு முழக்கத் தோடும் காவல்துறையையும் ஆளுநரையும் கண்டித்து  காவல் நிலையம் சென்றனர் தோழர்கள்.

இந்நிகழ்வில் பெரியார் சிந் தனையாளர்கள் இயக்கத்துக்கு ஆதரவாக திராவிட முன்னேற் றக் கழகத்தின் மாநில அமைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் இரா.சிவா. திமுக மாணவரணி அமைப்பாளர் தோழர் எஸ்.பி. மணிமாறன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பா .செ. சக்திவேல், திமுக கலை இலக்கிய அமைப்பாளர் தோழர் கி. சங்கர் உள்ளிட்ட திமுக பொறுப்பா ளர்கள். திராவிடர் கழக மாநில தலைவர் தோழர் சிவ. வீரமணி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக் கத்தினுடைய தலைவர் தோழர் பி.பிரகாஷ், மாணவர் கூட் டமைப்பு தலைவர் தோழர் சீ.சு. சுவாமிநாதன்,  இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் தலை வர் தோழர் பு.கலைப்பிரியன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி செயலாளர் தோழர் கி. மகேந்திரன், B.Bold அமைப்பின் தலைவர் தோழர் பஷீர் அகமது உள்ளிட்ட பெரியார் சிந்தனையாளர்கள் இயக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு கையொப்பம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்பு விடு வித்தனர்.

புதுச்சேரியில் கருத்துரி மைக்கு எதிராக  காவல்துறையை காவித் துறையாக மாற்றி ஏவி விட்டு தன் ஸநாதான போக்கைக் கடைப்பிடிக்கிற பார்ப்பன அடிமை ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம்! சமூக நீதியை பாதுகாக்க ஸநாதனத்தை வேர றுப்போம்! என்று தோழர்கள் முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment