புதுடில்லி, செப்.26- நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக்கோரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந் திரசூடுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க மேனாள் தலைவரும், மூத்த வழக் குரைஞருமான விகாஸ் சிங் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
நாடு சுதந்திரம் பெற்ற பின், இதுவரை, 270 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித் துள்ளனர். இதில், 11 பேர் மட்டுமே பெண்கள்; இது நியமனத்தில் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது. நீதித்துறையில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என் பதையே இது உணர்த்துகிறது.
நாட்டில், 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இதில் பாட்னா, உத்தரகண்ட், திரிபுரா, மேகா லயா, மணிப்பூர் உள்ளிட்ட உயர்நீதிமன்றங் களில் ஒரு பெண் நீதிபதி கூட நியமிக்கப்பட வில்லை. மீதமுள்ள, 20 உயர் நீதிமன்றங்களில், 670 ஆண் நீதிபதிளும், 103 பெண் நீதிபதி களும் உள்ளனர்.
எனவே, மக்களவை மற்றும் மாநில சட்ட சபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கும் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளதை போல, நீதித்துறையிலும், பெண் நீதிபதிகள் நியமனத்தின், 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment