எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அடாவடி ஆளுநர்கள்! கேரள மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அடாவடி ஆளுநர்கள்! கேரள மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்,செப்.29 - மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கேரள ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பாஜக ஆட்சி யில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்த மாநில அரசின் திட் டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நி¬ றவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் காலத்தை கடத்தி வருகி றார். இப்படி பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்துள்ளதால் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரின் செயல்பாட் டுக்கு எதிராகத் தமிழ்நாடு சட் டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  

அந்த வகையில் கேரள மாநிலத்திலும் ஆளுநர் ஆரிப், அம்மாநில அரசு நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 8 மசோதாக் களை 8 மசோதாக்களுக்கு 22 மாத காலமாக அம்மாநில ஆளுநர் ஆர்ப் முகமதுகான் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதற்காக அம்மாநில அரசு அழுத்தம் கொடுத்த போதிலும், அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் உள்ளார். 

இந்த சூழலில் மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காத கேரள ஆளுநருக்கு எதிராக அம் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக முடிவெடுத்துள்ளது. இதற்காக ஒன்றிய அரசின் மேனாள் அட் டர்ணி ஜெனரல் கே.கே.வேணு கோபாலிடம் ஆலோசனை பெறப்படும் என்றும் கூறப்படு கிறது. உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய ஏதுவாக ஏற்கெனவே மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமனை கேரள அரசு தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், “விரிவான விவாதங் களுக்குப் பிறகு  நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் அரசமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புத லுக்காக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப் பட்டன. நீண்ட காலத்திற்குப் பிறகும், இந்த மசோதாக்கள் சட்ட மாகவில்லை. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்கள் சட்டமாக மாறாமல் காலதாமதம் செய்வது நாடாளுமன்ற ஜன நாயகத்தின் சாராம்சத்துக்கு ஏற்புடையதல்ல” என்றார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே போல் தெலங் கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அவர் மீது அம் மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொட ரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தமி ழிசை. இந்த சூழலில் தற்போது கேரள மாநில அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடப்போவதாக அறிவித் துள்ளது பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. 

No comments:

Post a Comment