கோவை, செப்.27- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - செப்டம்பர் 17 ஆம் தேதியன்று கோவை மாவட்டம் முழுவதும் எழுச்சி யுடன் கொண்டாட்டம்.
காலை 9 மணி அளவில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட கழகத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழக தோழர்கள் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ‘சமூக நீதி நாள்' உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.
இதில் கோவை மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச் செல்வன், தெற்குமண்டல தலைவர் தனலட்சுமிரங்கநாதன், திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி நா.பிரபாகரன், திமுக பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் இரா.கார்த்திகேயன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ந.உதயகுமார், கே.பி.குணசேகரன், சரஸாவசந்த் மற்றும் திமுக முகமது ஜின்னா, மருத்துவர் அணி சக்திவேல், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன் சுந்தர், விசிக பகுதி கழக செயலாளர் அன்பரசு, தேமுதிக முருகேசன், மாவட்ட செயலாளர்
ஓ.பிஎஸ் அணி குறிச்சி மணிமாறன், சி.பி.எம் பரமசிவம், மேலும், அ.ம.மு.க பொறுப்பாளர்கள், விஜய் மக்கள் இயக்கம், காங்கிரஸ் கு.பே.துரை மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி காளீஸ்வரன்,பேராசிரியர் மு.தவமணி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆத்துப்பாலம்
தொடர்ந்து ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தோழர் சூசை ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றனர்.
சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.
குறிச்சி பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பெயின்டர் செல்வகுமார் தலைமையில் கழகக் கொடி ஏற்றி வைத்து உறுதி மொழி ஏற்றனர்.
குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் வடக்குப் பகுதி செயலாளர் தெ.கும ரேசன் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றி வைத்து உறுதி மொழி ஏற்றனர்.
சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு!
குனியமுத்தூரில் பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பெரியார் படத்திற்கு மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்செல்வன் தலைமையில், மாலை அணி வித்து கழகத் தோழர்கள் ‘சமூகநீதி நாள்' உறுதி மொழி ஏற்றனர்
பிள்ளையார்புரம் பகுதியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பெரியார் படத்திற்கு தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றி சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
காமராஜர் நகரில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் மாநகர செயலாளர் தி.க.செந்தில்நாதன் தலை மையில் கழகக் கொடி ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது.
முருகா நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் முத்துகணேசன் தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றனர்.
வெள்ளலூர்
வெள்ளலூர் பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ‘சமூகநீதி நாள்' உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.
அதேபோல், வெள்ளலூர் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் மாவட்ட துணை செயலாளர் தி.க.காளிமுத்து தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.
புலியகுளம்
புலியகுளம் பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா.
மாவட்ட செயலாளர் க.வீரமணி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி ஏராளமானோர் பங்கேற்று சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
மா.நா.க. வீதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஆட்டோ சக்தி தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அஞ்சுகம் நகர் பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கவிஞர் கவி கிருஸ்னன் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து திமுக தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
ஊர்வலம்
தொடர்ந்து மாலை 5 மணி அளவில்... கோவை சமூக நீதி முற்போக்கு அமைப்புகளின் சார்பில் சிவானந்தா காலனியில தொடங்கி காந்திபுரம் பெரியார் சிலை வரை தந்தை பிறந்த நாள் ஊர்வலம் கோவையில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பேரணியில் மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலாளர் புலியகுளம் க.வீரமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் மு.ராகுல், பொள்ளாச்சி மாவட்ட கழகத் தலைவர் சி.மாரிமுத்து, செயலாளர் ரவிச் சந்திரன், பொறியாளர் பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்செல்வம், துணைச் செயலாளர் தி.க.காளிமுத்து, அதேபோல் இளைஞரணி கார்த்திக், பொள்ளாச்சி வீர மலை, நாகராஜ் மற்றும் மகளிரணி ப.கலைச்செல்வி, த.கவிதா, மகளிர் பாசறை கு.தேவிகா , முத்துமணி, மாநகரத் தலைவர் தி.க. செந்தில்நாதன், மாநில துணைத் தலைவர் தரும வீரமணி, அக்ரி நாகராஜ், மற்றும் வடக்கு பகுதி செயலாளர் கவி கிருஸ்னன், கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன், படிப்பக காப்பாளர் செய்தியாளர் அ.மு.ராஜா, சிவக்குமார் , தமிழ்முரசு ஆட்டோ சக்தி, நா.குரு, வெற்றிச்செல்வன், ரமேஷ் ,முருகானந்தம், பொள்ளாச்சி செழியன், வெ.இளமதி வெ.தமிழரசன், தக.யாழினி, தக.கவுதமன், அஜித், முத்துகணேசன் ,இருதயராஜ் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் மகளிரணியினர் கழக கொடியுடன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment