ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.9.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமர் நேரு எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிப்பார். ஆனால் பிரதமர் மோடி எங்கள் நிழலைக் கூட காண விரும்பவில்லை என மல்லி கார்ஜூன கார்கே மாநிலங்களவையில் சாடல்.

* கேரள கோவில் விவகாரத்துறை அமைச்சர் 

கே. ராதாகிருஷ்ணன், சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ப தற்காக அங்கு சென்றபோது, மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஜாதி பாகுபாடுகளை எதிர் கொண்டதாகவும், ஹிந்து மதத்தில் உள்ள ஜாதி அமைப்பை உருவாக்கிய வர்கள், மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற தெளி வான செயல் திட்டத்தை கொண்டுள்ளனர் என்றும் கண்டித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*'பாஜகவுடன் கூட்டணி இல்லை', அதிமுக அறிவிப்பு; தேர்தலின் போது தேர்தல் உடன்படிக்கையை முடிவு செய்யலாம் என்கிறார்  அதிமுக தலைவர் ஜெயக்குமார்.

தி இந்து:

* காலிஸ்தானி செயற்பாட்டாளரை கொன்ற இந்திய அரசாங்கத்தின் தொடர்பை கனடா விசாரணை செய் கிறது, இந்திய தூதர் வெளியேற்றப்பட்டார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியிடம், இந்திய அரசின் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

* அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் எஸ்பிஅய்யின் மேனாள் தலைவர் ஓ.பி.பட், உச்ச நீதிமன்றம் நியமிக்கப் பட்ட நிபுணர்கள் குழுவின் ஒரு பகுதியாக இருப்பவர், தற்போது முன்னணி அதானி குழுமத்தின் தொடர்புடைய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான கிரீன்கோவின் தலைவராக பணியாற்றி வருவதாகவும் மனுதாரர் புகார். புதிய உறுப்பினரை நியமிக்க கோரிக்கை.

தி டெலிகிராப்:

* மகாராட்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான தகுதி நீக்க மனுவை ‘காலக்கெடுவுக்குள்’ முடி வெடுக்குமாறு பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

* அனைத்து ஹிந்துக்களையும் குறிக்கும் வகையில் "சனாதனி" என்ற பி.ஜே.பி அமைப்பின் வாதம், டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களில் எந்த ஆதரவையும் காண வில்லை. அம்பேத்கர் அல்லது என்சிஇஆர்டியின் பத் தாம் வகுப்பு வரலாற்றுப் பாட நூல், சனாதனிகள் "பழைமை வாத உயர்ஜாதி ஹிந்துக்கள்" என்று தான் விவரிக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நீட் தேர்வு விரக்தியில் ராஜஸ்தான் கோட்டாவில் பயிற்சி பெறும் உபியை சேர்ந்த மாணவி தற்கொலை. இந்த ஆண்டில் இது 24-வது தற்கொலை ஆகும்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment