சென்னை, செப்.6 இந்தியா பெயரை பாரத் என மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆளுங்கட்சி சார்பிலும், எதிர்க்கட்சி சார்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
"இந்தியா" கூட்டணி மீதான பயத்தால் மோடி நாட்டின் பெயரை பாரத் என மாற்றுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்து Reserve Bank of India என்று அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களெல்லாம் செல்லாது என ஒன்றிய அரசு அறிவிக்குமா? இதனை "துக்ளக் தர்பார்" என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment